ஜூலை 22,1822
மரபியலின் தந்தை (Father of Genetics) என்று குறிப்பிடப்படும் கிரிகோர் ஜான் மெண்டல் இன்று ஆஸ்திரியாவில் பிறந்தார்.
ஜூலை 22,1933
தனியே உலகைச் சுற்றி வந்த முதல் மனிதர் வைலி போஸ்ட் 7 நாட்கள், 18 மணி, 45 நிமிடங்களில் உலகைச் சுற்றிமுடித்து இன்று நியூயார்க்கை வந்தடைந்தார்.
ஜூலை 22,1947
மூவர்ணக் கொடி இன்று தான் இந்தியாவின் தேசியக் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஜூலை 22,1968
இந்தியாவின் முதல் பெண் டாக்டர் ஆன திருமதி முத்துலட்சுமி ரெட்டி இன்று காலமானார். அப்போது அவருக்கு வயது 82.
ஜூலை 22,2019
இந்தியாவில் சந்திரயான்-2 என்ற விண்கலம் நிலாவை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்டது.
ஜூலை 22,1915
கவிஞர் வாணிதாசன் புதுவையை அடுத்த வில்லியனூரில் இன்று பிறந்தார்.
தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் அரங்கசாமி என்ற எத்திராசலு என்பதாகும்.
ஜூலை 22,1933
நெஞ்சிருக்கும் வரை உள்ளிட்ட காலத்தால் அழியாத திரைப்படங்களைத் தந்த திரைப்பட இயக்குநர் ஸ்ரீதர் பிறந்த தினம்.
ஜூலை 22,1953
திரைப்படப் பாடகி எஸ். பி. சைலஜா பிறந்த தினம். இவர் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இவரது சகோதரர்.
ஜூலை 22,1968
இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மறைந்த தினம்.
இவர் நடிகர் ஜெமினி கணேசனுக்கு அத்தை முறையில் சொந்தம்.
அவர் மறைந்த நாளான இன்று வானொலியில் பேசிய இந்திரா காந்தி, "முத்துலட்சுமி ரெட்டி, சரோஜினி நாயுடு போன்ற பெண்கள் இல்லாமல் போயிருந்தால் நாம் இன்று உயர்ந்த இடங்களைப் பிடித்திருக்க முடியாது" என்று குறிப்பிட்டார்.
ஜூலை 22,1972
நடிகர் டி. எஸ். பாலையா மறைந்த தினம்.
திருநெல்வேலி சுப்பிரமணியம் பிள்ளை பாலையா என்பதன் சுருக்கமே டி.எஸ்.பாலையா. நடிகர் மட்டுமல்லாமல் இவர் ஒரு நல்ல பாடகரும்கூட. நாடக நடிகராக இருந்த அவரது முதல் திரைப்படம் சதி லீலாவதி.
ஜூலை 22,1996
எழுத்தாளர் நாரண.துரைக்கண்ணன் மறைந்த தினம்.
நாரண துரைக்கண்ணன் எழுத்தில் பண்பும் ஒழுக்கமும் முக்கியச் செய்திகளாக இருக்கும். அவருடைய நாவல்களில் புகழ் பெற்ற ஒரு நாவல் 'தரங்கிணி'.

Comments
Post a Comment
Your feedback