இப்போதெல்லாம் படுத்துத் தூங்குவது பெரும்பாலும் பஞ்சு மெத்தையில் தான். சரியாகச் சொன்னால் படுத்துக்கொள்வது என்னமோ மெத்தையில் தான். ஆனால் தூக்கம் வருவதெல்லாம் ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரி.
உழைப்பில்லாத வாழ்க்கை, வெயில் படாத மேனி என வாழ்க்கை எப்படியோ போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் சில வருடங்கள் முன்பு வரை தூங்குவது குறித்து பெரியதாக யாரும் அலட்டிக்கொள்ளவில்லை.
உழைப்பு தான் அழகு, மரியாதை. உடல் ரீதியாக உழைக்க முடியாதவர்கள் தவிர பொதுவாக உழைப்பு என்பது குடும்பப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு அடிப்படை என்ற எண்ணம் இருந்தது.
அதனால் தான் உழைக்காமல் பாசாங்கு வாழ்க்கை வாழ்பவர்களை வெட்டியாகத் திரிபவர்கள் என்ற வகைப்பாட்டில் அடக்கினார்கள்.
அப்படிப் பார்த்தால் இப்போது நம்மில் பலர் இந்த வகைப்பாட்டுக்குள் வந்து விடுவோம். பணம் சம்பாதிப்பது வேறு, வியர்வை வழிய உழைத்துச் சம்பாதிப்பது வேறு.
அப்படி உழைப்பவர்கள் உழைத்துக் களைத்த பின் உறங்கவும் ஓய்வெடுக்கவும் நல்ல மர நிழலில் சாக்கை விரித்துப்படுத்து, சில நொடிகளில் தூங்கிவிடுவர்கள்.
வசதியான ஏற்பாடு என்பதெல்லாம் அந்த சாக்குக்குள் வைக்கோல் திணித்துச் செய்யப்பட்ட மெத்தை தான். அது மாட்டு வண்டியில் போகும்போது விரிப்பாகவும், தூங்கும்போது மெத்தையாகவும் பயன்படுத்தப்பட்டது.
நம் இந்த வாழ்க்கை முறையின் தாக்கத்தில் தான் இரண்டாம் உலகப் போரின் போது இங்கிலாந்து இராணுவ வீரர்களுக்கு சாக்கும், சாக்குக்குள் புல் திணித்துச் செய்யப்பட்ட மெத்தையும் படுப்பதற்கு வழங்கப்பட்டன.
அதனால் தான் இது ஓய்வு நேரம் என்பதை இன்றும் ஆங்கிலத்தில்
it's time to hit the sack என்றும்
it's time to hit the hay என்றும் சொல்கிறார்கள்.
Hay என்பது வைக்கோல்.
நம் வார்த்தைகள் ஆங்கிலத்தில் நிறைய இருக்க, நம் வாழ்க்கை கூட ஆங்கில வார்த்தைகளை உருவாக்கக் காரணமாக இருந்திருக்கிறது.
Comments
Post a Comment
Your feedback