ஜூலை 16,1907
தன்னுடைய மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் மூலம் பல வெற்றிப் படங்களைத் தயாரித்த திரைப்பட இயக்குநர் டி. ஆர். சுந்தரம் இன்று பிறந்தார்.
ஜூலை 16, 1909விடுதலைப் போராட்ட வீரர் அருணா ஆசஃப் அலி பிறந்த நாள்.
ஜூலை 16,1929
ICAR, the Indian Council of Agricultural Research அமைப்பு இன்று உருவாக்கப்பட்டது.
ஜூலை 16,1947
பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இந்திய விடுதலைச் சட்ட மசோதா நிறைவேறியது.
ஜூலை 16,1968
தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட, புகழ் பெற்ற இந்திய ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை பிறந்த நாள்.
ஜூலை 16,2004
கும்பகோணத்தில் பள்ளியொன்றில் இன்று நடந்த தீ விபத்து பல குழந்தைகளின் இழப்புக்குக் காரணமானது.
ஜூலை 16, 2009
கர்நாடக சங்கீதத்தில் பெரும் புகழ்பெற்ற பாடகியாக விளங்கிய டி.கே.பட்டம்மாள் இன்று மறைந்தார்.
மேடைக் கச்சேரிகளில் பெண்களையே பார்க்க முடியாத காலத்தில் டி. கே. பட்டம்மாள், எம். எஸ். சுப்புலட்சுமி, எம். எல். வசந்தகுமாரி மூவரும் மேடைக் கச்சேரிகள் செய்து புகழ்பெற்றவர்கள்.
டி. கே. பட்டம்மாள் கான சரஸ்வதி என்ற அடைமொழிக்குச் சொந்தக்காரர். இவர் பேத்தி தான் பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் .

Comments
Post a Comment
Your feedback