ஜூலை 2, 1566
எதிர்கால நிகழ்ச்சிகளை சரியாக கனித்து உலகப் புகழ் பெற்ற நாஸ்ட்ரடாம்ஸ் இன்று பிரான்சில் காலமானார்.
ஜூலை 2, 1778
சிந்தனையாளர் ரூஸ்லோ இன்று காலமானார் "இறுதிக்காலத்தில் சாவையும் வாழ்வையும் இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் உடல் நோயும் நலத்தையும் சமமாகவே எண்ணுகிறேன் கடவுளைப் போல நானும் ஆசை பாசம் இல்லாதவன்" என்று இறப்பதற்கு முன்பு கூறியவர் அவர்.
ஜூலை 2, 1843
ஹோமியோபதி சிகிச்சை முறையை ஆரம்பித்த சாமுவேல் ஹனிமான் பாரிஸில் காலமானார்.
ஜூலை 2, 1897
வானொலிக்கு மார்கோனி காப்புரிமை பெற்றார்.
ஜூலை 2, 1961
கிழவனும் கடலும் போன்ற புகழ் பெற்ற நாவல்களை எழுதிய அமெரிக்க எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே இன்று தற்கொலை செய்து கொண்டார்.
ஜூலை 2, 1972
பாரதப் பிரதமர் இந்திரா காந்தியும் பாகிஸ்தான் பிரதமர் பூட்டோவும் இன்று சிம்லா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
ஜூலை 2, 1983
இந்தியாவின் முதல் 235 மெகாவாட் அணு மின் நிலையம் ஆன கல்பாக்கம் அணு மின் நிலையம் இன்று செயல்படத் தொடங்கியது.
Comments
Post a Comment
Your feedback