ஜூலை 15, 1815
வாட்டர் லூ போரில் தோல்வி அடைந்த நெப்போலியன் இன்று பிரிட்டிஷாரிடம் சரணடைந்தார்.
ஜூலை 15, 1876
மறைமலை அடிகள் பிறந்த நாள்.
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்... உற்ற தேகத்தை உடல் மறந்தாலும்... எனும் வள்ளல் ராமலிங்க அடிகளாரின் பாடலை பாடிக் கொண்டிருந்த மறைமலை அடிகளார், இடையில் நிறுத்தி - 'உற்ற யாக்கையை உடல் மறந்தாலும்' என்று பாடியிருந்தால் சிறப்பாக இருக்குமே என்று கருதினார்.
தேகம் என்ற வடமொழிச் சொல் நீங்கி, யாக்கை எனும் தூய தமிழ் சேரும் என்பதால் மகிழ்வுற்ற அவர் அந்தத் தினத்திலிருந்து வேற்று மொழி கலவாமல் தமிழ் பேசுவோம் என்று தன் குடும்பத்தாரிடம் கூறினார். இதுவே, அவரது தனித்தமிழ் இயக்கத்தை வலுவூட்டியது.
சுவாமி வேதாச்சலம் என்ற தனது பெயரை மறைமலை அடிகள் என்று மாற்றிக் கொண்டார். சமரச சன்மார்க்க நிலையம் என்றிருந்த அவரது அமைப்பை 'பொது நிலைக்கழகம்' என்றும் மாற்றிக் கொண்டார்.
ஜூலை 15, 1903
காமராஜர் பிறந்த நாள்.
நாட்டு விடுதலைக்காக 9 ஆண்டுகள் சிறையிலிருந்தவர்.
பல்கலைக்கழகப் படிப்போ, பட்டமோ பெறாதிருந்தும், தனிப்பட்ட முறையில் ஏராளமான நூல்களைப் படித்து உலக அறிவை வளர்த்துக் கொண்டவர்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, 1954 முதல் 1963 வரை முதலமைச்சராக இருந்தவர்.
இந்தியாவின் பிரதமரை இருமுறை தேர்ந்தெடுப்பதில் முக்கியப் பங்கு வகித்தவர். அதனால் தான் அவர் ‘கிங் மேக்கர்’ என அழைக்கப்படுகிறார்.
தான் முதலமைச்சராக இருந்தபோதும் எந்த வசதியும் இல்லாத வீட்டில் குடியிருந்த தன்னுடைய தாய்க்கு வீடு மராமத்து செய்ய என்னிடம் பணம் இல்லை என்று கூறிவிட்ட அவருடைய அப்பழுக்கற்ற நேர்மை நம்மை நெகிழ வைக்கும்.
அப்படி ஒரு தலைவர் தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்தார் என்றால் இந்தக் காலத்தில் நம்பக்கூட மாட்டார்கள்.
வெறும் விளம்பரத்துக்காக காகித்திட்டங்களாக இல்லாமல் மக்களை நினைத்து, தொலை நோக்கோடு அவர் செய்த பணிகள் தான் இன்றும் தமிழ்நாடு வளத்தோடு விளங்கக் காரணம்.
உலகின் மிகப்பெரிய விமான நிறுவனம் போயிங் இன்று தான் தொடங்கப்பட்டது.
ஜூலை 15, 1948
இந்தியாவில் என்சிசி NCC தொடங்கப்பட்டது.
ஜூலை 15, 1979
மொரார்ஜி தேசாய் பிரதமர் பதவியில் இருந்து இன்று விலகினார்.
Comments
Post a Comment
Your feedback