Skip to main content

செந்தூர் முருகன் கோவிலிலே

 

செந்தூர் முருகன் கோவிலிலே

தாமிரபரணி பாயும் திருநெல்வேலிப் பூமி ஸ்ரீவைகுண்டம். 

அந்த ஸ்ரீவைகுண்டம் நகரைச் சேர்ந்தவர்கள் சண்முக சிகாமணிக் கவிராயர் - சிவகாம சுந்தரி அம்மையார் தம்பதியர்.  குழந்தை வரம் கேட்டு திருச்செந்தூர் முருகனை வழிபட்டு, குழந்தை பாக்கியம் பெற்றனர்.

குழந்தைக்கு ஐந்து வயது ஆனது.  அப்போதும் குழந்தை பேசவில்லை.  குழந்தை பேசவில்லையே என மனங்கலங்கினர்.  திருச்செந்தூர் முருகனைத் தவிர வேறு உபாயம் அறியாதவர்கள் அவர்கள்.

    நம்பிக்கையோடு திருச்செந்தூர் சென்று 41 நாள் விரதமிருந்தனர்.  ஆனாலும் குழந்தை பேசவில்லை.  “குழந்தை பேசினால் ஊருக்குப் போவோம். இல்லாவிட்டால் முருகா! நீ என்ன முடிவைத் தந்தாலும் சரி” என மீண்டும் விரதத்தைத் தொடர்ந்தனர்.

அன்று 45 ஆவது நாள்.  செந்திலாண்டவன் சன்னதியில் அமர்ந்திருக்கின்றனர்.  குழந்தை பேச ஆரம்பித்தது.  அந்தக் குழந்தைதான் குமரகுருபரர்.

குழந்தையாக இருக்கும்போது பாடிய முதல் நூல் ‘கந்தர் கலி வெண்பா’  அதில் ‘சரவணபவ’ என்ற மந்திரத்தின் மகிமையைப் பாடியிருப்பார்.

மதுரை மீனாட்சியம்மனைப் போற்றி ‘மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்’ பாடினார்.  திருமலை நாயக்க மன்னர் முன்னிலையில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் அரங்கேற்றம் ஆரம்பித்தது.  அப்போது எங்கிருந்தோ ஒரு குழந்தை வந்து திருமலை நாயக்க மன்னனின் மடியில் அமர்ந்து கொண்டது.  மன்னனும் புன்முறுவலோடு குழந்தையை அணைத்துக் கொண்டான். குழந்தை மன்னனின் கழுத்திலிருந்த முத்துமாலையை உரிமையோடு எடுத்து, குமரகுருபரர் கழுத்தில் அணிவித்தது.  அரங்கேற்றம் முடிந்த பின் அந்தக் குழந்தை யார் கண்ணிலும் மீண்டும் தென்படவில்லை.

பின்பு ஒரு நாள் காசி சென்றார் குமரகுருபரர்.  காசியில் மடம் கட்ட சுல்தானிடம் இடம் கேட்க விரும்பினார்.  சுல்தானுக்கு தமிழ் தெரியாது.  இவருக்கோ இந்துஸ்தானி மொழி தெரியாது.  மனம் தளராமல் நான் நினைத்த காரியம் சித்தியாக வேண்டும் என சரஸ்வதி தேவியைப் போற்றிப் பத்துப்பாடல்கள் பாடினார்.    சுல்தான் இவர் விரும்பிய இடத்தைக் கொடுத்தார். அந்த இடத்தில் ‘குமாரசுவாமி மடம்’ அமைக்கப்பட்டது.  இன்றும் அவர் பெயரில் உள்ள இந்த மடம் தென்னிந்தியாவில் இருந்து காசிவரும் அடியார்களுக்குச் சேவையாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது.  அவர் பாடிய அந்தப் பாடல்களின் தொகுப்பே ‘சகலகலாவல்லி மாலை’ என்பது.

பிறந்தது முதல் பக்தி நெறியில் திளைத்த குமரகுருபரர் சிதம்பர மும்மணிக்கோவையில்  தன்னைப் பற்றிச் சொல்கிறார்.

நான் தவத்தில் சிறந்த ஞானியைப் போல வேம் போட்டுக் கொண்டேன்.  ஆனால், எனக்குள் பொய், புரட்டு, வஞ்சகம் இவையே நிறைந்திருந்தன.

பின்னர் வடதிசை சென்றேன்.  சிவபெருமானின் திருநடனத்தைப் பார்க்கும்பேறு பெற்றேன்.  என் பிறவிப்பயனை அடைந்தேன்.

நான் எந்த முயற்சியும் செய்யாமலேயே எனக்கு அந்தப் பெருமை கிடைத்தது.  என்ன காரணம்  ஒரே காரணம் தான் எனக்குத் தெரிகிறது. 

பெருமானே! நான் தவறான பழக்கங்களைக் கொண்டிருந்த போதும் உன்னுடைய உண்மையான பக்தர்களோடு பழக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.     அது மட்டுமல்ல, நான் போட்ட இந்த அடியார் வேத்தை மக்கள் தினந்தினம் பார்த்தார்கள்.  அவர்கள் என்னை உண்மையான பக்தன் என்றே நினைத்தார்கள்.  உண்மையில், அவர்கள் என்னில் உன்னையே பார்த்தார்கள்.

இப்படி அவர்கள் தொடர்ந்து எனக்குள் உன்னைப் பார்த்து வந்ததால், ஒரு கட்டத்தில் அந்தப் பாவனையே உண்மையாகி விட்டதோ!  அதனால் தான் எனக்கு இந்தப் பெரும்பேறு கிடைத்ததோ?

 

குமரகுருபரர் பாடிய சிதம்பர மும்மணிக் கோவை பாடல்

செய் தவ வேடம் மெய்யில் தாங்கி,

கைதவ ஒழுக்கம் உள் வைத்துப் பொதிந்தும்,

வடதிசைக் குன்றம் வாய் பிளந்தன்ன

கடவுள் மன்றில் திருநடம் கும்பிட்டு

உய்வது கிடைத்தனன், யானே உய்தற்கு

ஒரு பெரும் தவமும் உஞற்றிலன், உஞற்றாது

எளிதினில் பெற்றது என் எனக் கிளப்பின்,

கூடா ஒழுக்கம் பூண்டும் வேடம்

கொண்டதற்கு ஏற்ப நின் தொண்டரொடு பயிறலின்

பூண்ட அவ்வேடம் காண்தொறும் காண்தொறும்

நின் நிலை என்னிடத்து உன்னி உன்னிப்

பல்நாள் நோக்கினர் ஆகலின், அன்னவர்

பாவனை முற்றியப் பாவகப் பயனின் யான்

மேவரப் பெற்றனன்போலும்!



Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...