ஜூலை 8,1497
170 பேருடன் ஐரோப்பாவிலிருந்து கடல் வழியாகப் பயணத்தைத் தொடங்கிய வாஸ்கோடகாமா வெற்றிகரமாக இன்று இந்தியாவில் காலடி வைத்ததால் வரலாற்றில் இடம்பெற்றார்.
ஜூலை 8,1806
வேலூர்க் கலகம் என்று குறிப்பிடப்படும் இன்றைய நிகழ்ச்சியில் இந்தியச் சிப்பாய்களால் பல ஆங்கிலேயப் படையினர் கொல்லப்பட்டனர்.
ஜூலை 8, 1809
அமெரிக்க விடுதலைக்காக போராடிய வரும் காமன் சென்ஸ் என்னும் துண்டு பிரசாதத்தின் மூலம் மக்களிடம் எழுச்சியை உண்டாக்கியவருமான தாமஸ் பெயின் இன்று நியூயார்க்கில் காலமானார்.
ஜூலை 8, 1822
Ode to the west wind, Ode to the Skylark ஒன்று புகழ்பெற்ற கவிதைகளை எழுதிய ஆங்கில கவிஞர் ஷெல்லி தன் 30 ஆவது வயதில் கடலில் மூழ்கி இன்று காலமானார்.
அமெரிக்கச் செய்தித் தாள் The Wall Street Journal இன்று வெளியீட்டைத் தொடங்கியது.
ஜூலை 8, 1898
சென்னை மாகாணத்தின் கடைசி முதலமைச்சராகவும், சென்னை மாநில முதல் முதல்வராகவும் இருந்த குமாரசுவாமி ராஜா பிறந்த தினம்.
ஜூலை 8,1914
நீண்ட காலம் தொடர்ந்து ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த பெருமைக்குரிய ஜோதி பாசு பிறந்த நாள். 1977ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை மேற்கு வங்க முதலமைச்சராக இருந்தவர் இவர்.
ஜூலை 8,1918
இந்திய அரசியலமைப்பில் மாற்றம் செய்வது குறித்த மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்த அறிக்கை இன்று வெளியானது.
ஜூலை 8,1919
எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு பிறந்த நாள்.
ஜூலை 8,1939
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அரிசன மக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
ஜூலை 8,1962
உலகின் முதல் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் டெல்ஸ்டார் இன்று விண்ணில் ஏவப்பட்டது.
ஜூலை 8,1980
மயிலை சீனி வேங்கடசாமி மறைந்த நாள்.

தமிழ் மொழியில் மறைந்து கிடந்த செய்திகளைத் தேடிக் கொணர்ந்தவர் மயிலை.சீனி வேங்கடசாமி.
ஒருமுறை 'யாப்பருங்கலவிருத்தி' என்னும் ஒரு நூலைப் படித்தார்.
இந்த நூலின் உரையாசிரியர், தமது உரை விளக்கத்தில், சில நூல்களை மேற்கோள்களாகக் கூறியிருந்தார். அந்த நூல்கள் தற்போது இருப்பதாகத் தெரியவில்லை.
இத்தகைய நூல்களின் பெயர்களைமட்டுமாவது தொகுத்து வெளியிட வேண்டும் என நினைத்து, அதனைச் செயல்படுத்தினார். மறைந்து போன தமிழ் நூல்கள் என்ற ஓர் அரிய நூலைப் படைத்தார்.
களப்பிரர் காலத் தமிழகம் என்னும் ஆய்வு நூலை எழுதி வெளியிட்டார்.
தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் என்றோர் நூலை வெளியிட்டு, முதன்முதலில் அழகுக்கலைகள் பற்றித் தமிழில் எழுதிய பெருமை பெற்றார்.
கொங்கு நாட்டு வரலாறு,
துளுவ நாட்டு வரலாறு,
சேரன் செங்குட்டுவன்,
மகேந்திர வர்மன்,
நரசிம்ம வர்மன்,
மூன்றாம் நந்தி வர்மன்
ஆகிய நூல்கள் இவர் வழங்கியுள்ள வரலாற்றுப் படைப்புகள்.

Comments
Post a Comment
Your feedback