சிரிப்பானது பல்வேறு சந்தர்ப்பங்களில் இயல்பாகவே வரும். சில நேரங்களில் செயற்கையாகவும் இருக்கும்.
குழந்தைத்தனம் முதல் வில்லத்தனம் வரை, ஆணவம் முதல் இயலாமை வரை எதை வேண்டுமானாலும் ஒரு சிரிப்புக்குள் ஒளித்து வைத்துவிட முடியும்.
உதடுகள் ஒட்டி இருக்கும் போதே உள்ளத்தில் மகிழ்ச்சி ததும்புவதை மென்மையாகக் காட்டும் சிரிப்பு ஒரு வகை அழகு.
முன்பல் முழுதாகத் தெரியாமல் சற்றே உதடு விரித்துச் சிரிப்பது ஒரு வகை அழகு.
இந்தச் சிரிப்புகளுக்குள் ஒட்டிக்கொண்டு "இதுவும் சிரிப்பு தான்" என்று அசடு வழிய வரும் ஒன்றை, பேச்சு வழக்கில் 'இளிப்பு' என்று சொல்லுவார்கள்.
உதடுகளின் நுனிகள் கடைவாய்ப் பற்களை நோக்கி நகரும்போதே லேசாக விரிய ஆரம்பித்து முழுப் பல்வரிசையும் தெரிய சிரிப்பது இளிப்பது என்ற வரையறைக்குள் அடங்கும்.
சிரிப்பது போல இளிப்பதை ஆங்கிலத்தில் grin like a Cheshire cat என்று சொல்லுவார்கள். அது என்ன Cheshire cat.
அது இளிப்பதைப் போல சிரிக்கிற ஒரு பூனை. உண்மையில் அப்படி ஒரு பூனை இல்லை. அது ஒரு கற்பனையான பூனை.
Lewis Carroll எழுதிய Alice's Adventures in Wonderland கதையில் இந்தப் பூனை ஒரு Character.
குழந்தைகளுக்குத் தோன்றும் குதர்க்கமான கற்பனைகள் எப்படி இருக்கும் என்று புரிந்து கொள்ள இந்தக் கதையை படிக்கலாம். குழந்தைகளுக்கான கதை என்றாலும் நாமும் ரசிக்கலாம்.
அந்தக் கதையில் தான் grin like a Cheshire cat என்ற வாசகம் வருகிறது. செஷையர் பூனை போல சிரிக்கிறான் என்பது தான் அதன் தமிழ் வடிவம். (ஷேசையர் பூனை என்று படிக்கக் கூடாது)
அந்தப் பூனையின் வித்தியாசமான சிரிப்பு எல்லோருடைய மனதையும் கவர்ந்ததால் இளிப்பதைக் குறிப்பிட இன்றும் ஆங்கிலத்தில் இந்த வாசகம் அப்படியே பயன்படுத்தப்படுகிறது.
சில படங்களில் வடிவேலு சிரிப்பதெல்லாம் இந்த Cheshire cat வகைச் சிரிப்பு தான்.
Comments
Post a Comment
Your feedback