ஜூலை 25,1908
திருமண விருந்துகள், ஹோட்டல்களில் பரிமாறப்படும் பிரியாணி போன்ற அசைவ வகைகள், சைனீஸ் துரித உணவு வகைகள் இங்கெல்லாம் சுவையைக் கூட்டப் பயன்படுத்தப்படும் அஜினமோட்டோ டோக்கியோ பல்கலைக்கழகத்தில் இன்று தான் கண்டுபிடிக்கப்பட்டது.
உண்மையில் அஜினமோட்டோ என்பது இதன் பெயர் அல்ல. இதைக் கண்டுபிடித்த நிறுவனத்தின் பெயர். இதன் பெயர் “மோனோ சோடியம் குளுட்டமேட்”.
இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வேதிப்பொருள் உணவில் பயன்படுத்தப்படுகிறது.
ஜூலை 25,1908
பிரபல கர்நாடக இசைப் பாடகர் செம்மங்குடி சீனிவாச ஐயர் இன்று பிறந்தார்.
ஜூலை 25,1925
சோவியத் யூனியனின் செய்தி நிறுவனம் "டாஸ்" இன்று தான் நிறுவப்பட்டது.
ஜூலை 25,1978
உலகின் முதல் டெஸ்ட் டியூப் குழந்தையான லூயிஸ் ஜாய் பிரவுன் இங்கிலாந்தில் பிறந்தது.
ஜூலை 25,1987
ஆர் வெங்கட்ராமன் இந்தியாவின் எட்டாவது ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
ஜூலை 25,1992
சங்கர் தயாள் சர்மா இன்று இந்தியாவின் ஒன்பதாவது ஜனாதிபதியாக பதவியேற்றார்.
ஜூலை 25, 2001
சாம்பல் பள்ளத்தாக்கில் பிரபலமான கொள்ளைக்காரியாக இருந்து பிறகு அரசியல்வாதியாக சில நாள் இருந்த பூலான் தேவி இன்று சுட்டுக்கொல்லப்பட்டார். "பாண்டிட் குயின்" என்ற பெயரில் பூலான்தேவியின் வாழ்க்கையைச் சொல்லும் சினிமா உலக அளவில் பேசப்பட்ட படமாக விளங்கியது.
ஜூலை 25, 2007
பிரதீபா பாட்டில் இந்தியாவின் 12-ஆவது குடியரசுத்தலைவரானார். இதன் மூலம் இந்தியாவின் முதல் பெண் குடியரசுத்தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். அப்துல்கலாம் தொடர்ந்து இரண்டாவது முறை குடியரசுத் தலைவராக இருக்க வேண்டும் என்ற நாட்டுமக்களின் விருப்பத்துக்கு மாறாக இவர் தேர்வு செய்யப்பட்டார்.
ஜூலை 25, 2021
தமிழறிஞர் இரா. இளங்குமரனார் மறைந்த தினம்.

Comments
Post a Comment
Your feedback