ஜூலை 5, 1687
ஐசக் நியூட்டன் தனது புகழ்பெற்ற பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா நூலை வெளியிட்டார்.
ஜூலை 5, 1902
தமிழ் எழுத்தாளரும் கவிஞருமான அ.கி.பரந்தாமனார் பிறந்த தினம்.
ஜூலை 5, 1946
தமிழகத்தின் பிரபல நாவலாசிரியர் மற்றும் எழுத்தாளர் பாலகுமாரன் இன்று பிறந்தார்.
ஜூலை 5, 1955
பிபிசி செய்தி நிறுவனம் இன்று தன் முதல் செய்தி ஒலிபரப்பை தொலைக்காட்சியில் வெளியிட்டது. இது முன்பே பதிவுசெய்யப்பட்ட ஒரு இருபது நிமிட செய்தி ஒலிபரப்பு.
ஜூலை 5, 1968
இந்தியாவுக்கான முதல் நீர் மூழ்கிக்கப்பல் இன்று சோவியத் ரஷ்யாவிலிருந்து வந்தது.
ஜூலை 5, 1970
தமிழக எழுத்தாளரும் சிறுகதை ஆசிரியருமான கு.அழகிரிசாமி மறைந்த நாள்.
ஜூலை 5, 1977
பாகிஸ்தானில் நடந்த இராணுவப் புரட்சியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமர் சுல்பிக்கார் அலி பூட்டோ பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
ஜூலை 5,1996
குளோனிங் முறையில் இன்று டோலி என்ற ஆடு ஸ்காட்லாந்தில் பிறந்தது. அந்த நாட்களில் இது உலகம் முழுவதும் முக்கியமான பேசுபொருளாக இருந்தது.


Comments
Post a Comment
Your feedback