ஜூலை 21,1883
இந்தியாவின் முதல் திரையரங்கம் ஸ்டார் தியேட்டர் கல்கத்தாவில் திறந்து வைக்கப்பட்டது.
ஜூலை 21,1899
"ஒவ்வொரு தொட்டிலும் எங்கே இருந்து வந்தேன் என்று கேட்கிறது; ஒவ்வொரு சவப்பெட்டியும் எங்கே போகிறேன் என்று கேட்கிறது" என்று கூறிய சிந்தனையாளர் இங்கர்சால் காலமானார்.
ஜூலை 21,1960
உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்ற சிறிமாவோ பண்டாரநாயக்கா இலங்கையின் பிரதமராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.
ஜூலை 21,1969
நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் நடந்த முதல் மனிதர் என்று இன்று அறிவிக்கப்பட்டது.
ஜூலை 21,1889
மாயூரம் வேதநாயகம் பிள்ளை மறைந்த தினம்.
தமிழில் வெளியான முதல் நாவல் (புதினம்) இவர் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் தான்.
ஜூலை 21,1984
தினமலர் செய்தித்தாள் நிறுவனர் டி.வி. இராமசுப்பையர் மறைந்த நாள்.
ஜூலை 21,2001
நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த நாள்.

Comments
Post a Comment
Your feedback