மன உறுதியில் பெண்கள் மென்மையானவர்கள் என்றும் ஆண்கள் எந்தப் பிரச்சினையையும் சமாளித்து மீண்டு வரும் திண்மை உடையவர்கள் என்றும் காலம்காலமாக நம்பப்படுகிறது.
முதலில் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவர் பற்றியும் யாருக்கு எந்த நேரத்தில் என்ன தேவை? எது பிடிக்கும் எது பிடிக்காது? என்பதில் பெண்களின் உளவியல் வெற்றிக்கு முன் ஆண்களின் புரிதல் என்பது தேராத கேஸ் தான்.
ஒரு பிரச்சினையை பல கோணங்களில் அணுகும் தன்மை பெண்களுக்கு இருப்பது போல் ஆண்களுக்கு இல்லை. இந்தப் பிரச்சினைக்கு என்ன என்ன வகையில் தீர்வு காணலாம் என்று ஆண்களைக் கேட்டால் ஒன்று அல்லது இரண்டு தீர்வைக் கூறி விட்டு அதில் தான் சரி என நினைப்பதை மற்றவர்களை ஏற்றுக்கொள்ள வைக்க வலியுறுத்தும் முயற்சி தான் இருக்கும். ஆனால் பெண்களிடம் இந்த வலியுறுத்தும் தன்மை மென்மையாக இருப்பதால் ஆண் சொல்லும் தீர்வு சரியானதாக இல்லாத போதும் ஆண்களின் விருப்பத்துக்கு நெகிழ்ந்து தரும் ஒரு தலைமைப் பண்பு இருக்குமாம்.
கார்ல் ஜங் என்ற உளவியலாளர் பெண்ணிடம் உள்ள தன்னிலை மறந்த ஆண்மையை அனிமஸ்(animus) என்றும் ஆணிடம் இருக்கும் தன்னிலைமறந்த பெண்மையை அனிமா(anima) என்றும் வரையறுக்கிறார். ஆணிடம் தோன்றும் அனிமா ஒரு நோக்கில் மட்டும் அமைய பெண்ணிடம் உள்ள அனிமஸ் கலப்புக் குணாதிசயங்களையும் திண்மையையும் கொண்டதாக இருக்கும் என அவர் தெளிவுபடுத்துகிறார்.
வெறுமனே வேலைக்குப் போய் மாதா மாதம் குடும்பச் செலவை ஆண் தானே சமாளிக்கிறான்? அப்படித் தானே நினைக்கிறோம்.
வீட்டுக்குள் பெண்கள் செய்யும் வேலை என்பதோடு ஒப்பிட வேலைக்குப் போவதெல்லாம் ஒன்றுமே இல்லையாம்.
யோசிக்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது.
Carl jung- theory ஒரு புதிய பார்வையைத் தருகிறது.
அது சரி போலவும் இருக்கிறது.
Comments
Post a Comment
Your feedback