Skip to main content

Posts

Showing posts from July, 2025

ஆகஸ்ட் 1

 ஆகஸ்ட்  1, 1763                        உலகிலேயே முதல் முறையாக மெட்ரிக்  முறை(Metric System) என்று சொல்லப்படும் மீட்டர், சென்டிமீட்டர் போன்ற இப்போது நாம் பயன்படுத்தும் அளவு முறை பிரான்ஸ் நாட்டில் இன்று அமலுக்கு வந்தது. ஆகஸ்ட்  1,  1774                          ஆக்ஜிசன்( Oxygen) என்பது ஒரு வாயு தான் என்று ஜோசப்  ப்ரிஸ்ட்லி என்ற வேதியியல் அறிஞர்  இன்று தான் முதன்முதலாகக் கண்டுபிடித்துக் கூறினார்.  அவர் oxygen என்ற பெயரை அதற்கு வைக்கவில்லை. அவர் முதலில் வைத்த பெயர் ‘dephlogisticated air’. . பிறகு தான் அது oxygen என மாற்றப்பட்டது.   ஆகஸ்ட் 1, 1861 முதன்முதலாக செய்தித்தாளில் வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த முன்னறிவிப்பு அட்மிரல் ராபர்ட் (Admiral Robert Fitzroy) என்பவரால் தயாரிக்கப்பட்டது.  சார்லஸ் டார்வின் இயற்க...

ஜூலை 31

 ஜூலை 31,1658 ஔரங்கசீப் இந்தியாவின் முகலாயப் பேரரசராக முடிசூடினார்.   ஜூலை 31,1805 தீரன் சின்னமலை மறைந்த நாள்.   ஜூலை 31,1874 சதாவதானி  செய்குத்தம்பி பாவலர் பிறந்த நாள் .  முஸ்லீம்  புலவரான இவர்  கதராடையும் காந்தி குல்லாயும் அணிந்து, விடுதலை உணர்வைப் பரப்பியவர். இசுலாமிய மித்திரன் எனும் இதழை நடத்தி வந்தார்.  சீறாப்புராணத்துக்கு உரை எழுதினார்.  அந்தாதிகள், கோவைகள், பாமாலை, மஞ்சரி, நீதி வெண்பா மற்றும் பல்வேறு உரைநடை நூல்களையும், ஆனந்தக் களிப்பு எனும் மொழிபெயர்ப்பையும், சாற்றுக் கவிகள், வாழ்த்துக்கவிகள், சிலேடைக் கவிகள், சீட்டுக் கவிகள் எனப் பல  பாக்களையும் அளித்தவர் இவர். நபிகள் நாயக மான்மிய மஞ்சரி உள்ளிட்ட பல கவிதை நூல்களையும், பல  வசன நடை காவியங்களையும் எழுதியவர். ஜூலை 31,1912 இந்திய தேசிய காங்கிரசை தோற்றுவித்தவரும் 20 ஆண்டுகள் அதன் பொதுச்செயலாளராக இருந்தவருமான ஆலன் ஆக்டேவியன் ஹியூம்  இன்று பிரிட்டனில் தன் 84 வது வயதில் காலமானார். ஜூலை 31,1928 எம்.ஜி.எம் (MGM) என்று குறிப்பிடப்படும் மெட்ரோ கோல்ட்வின் மேயர் என்னும் திரைப்...

ஜூலை 29

 ஜூலை 29,1987 இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வாக இலங்கை-இந்திய ஒப்பந்தம் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை ஜனாதிபதி  ஜெயவர்த்தனாவுக்கும் இடையில் கொழும்பில்  கையெழுத்திடப்பட்டது.  இந்நிகழ்வில் இடம்பெற்ற மரியாதை அணிவகுப்பின் போது ராஜீவ் காந்தி இலங்கை இராணுவ வீரன் ஒருவனால் துப்பாக்கியால் தலையில் குத்தப்பட்டு காயம் அடைந்தார்.  ஜூலை 29,1936 இ ரண்டு முறை சாகித்ய அகாடெமி விருது பெற்றவரும், பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணிபுரிந்தவருமான  கவிஞர்   சிற்பி பாலசுப்பிரமணியம்  பிறந்த நாள்.    ஜூலை 29,1974 மதுரை தியாகராஜர் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் குழுமங்களின் நிறுவனர் கருமுத்து தியாகராசர் மறைந்த நாள்.

ஜூலை 28

 ஜூலை 28,1635 அறிவியல் அறிஞர், ஆங்கிலேய மருத்துவர்   ராபர்ட் ஹூக் பிறந்த நாள் இன்று. நுண்ணோக்கியைக் கண்டுபிடித்து அதன் உதவியால் செல்கள் பற்றிய இவரது  கண்டுபிடிப்பு தான் உயிரியல் துறையில் பெரும் பங்களிப்பைத் தந்தது.   ஜூலை 28,1907 A.V.M  திரைப் படத் தயாரிப்பு  நிறுவன நிறுவனர் ஏ. வி. மெய்யப்ப செட்டியார்  இன்று தான் பிறந்தார்.   ஜூலை 28,1914 முதல் உலகப் போர் இன்று தொடங்கியது.  நான்கு வருடம், மூன்று மாதம், இரண்டு வாரம் நடந்த இந்தப் போர் நவம்பர் 11, 1918 அன்று முடிவுக்கு வந்தது. ஜூலை 28,1925 ஹெப்பாடிட்டீஸ் பி வைரஸ் கிருமியைக் கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி Dr Baruch Blumberg , இன்று தான் பிறந்தார்.  இவரது பிறந்த நாளான ஜூலை 28 தான் உலக ஹெப்பாடிட்டீஸ் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 28,1976 சீனாவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.  தொழில் நகரமான டாங்ஷான் அடியோடு தரைமட்டமாயிற்று.  இதில் சுமார் 6,50,000 பேர் உயிரிழந்தனர். ஏழு லட்சம் பேர் காயமடைந்தனர்.

ஜூலை 27

 ஜூலை 27,1876 கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை பிறந்த நாள். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் சொற்பொழிவுகளும், உரைநடைகளும் புகழ் பெற்றவை.  'கவிமணியின் உரைமணிகள்'  என்ற தலைப்பில் அவை நூல் வடிவம் பெற்றுள்ளன.  உமார்கய்யாம், ஆசியஜோதி ஆகியன இவரது மொழிபெயர்ப்புப் பாடல்கள்.  மருமக்கள் வழி மான்மியம் எனும் இவரது  கவிதை நூல் புகழ் பெற்ற   ஒன்றாகும்.  கவிதைக்கு இலக்கணம் சொன்னவர்  கவிமணி.  கவிதை எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு விடை அவரின் இந்தக் கவிதை. உள்ளத் துள்ளது கவிதை - இன்பம் உருவெடுப்பது கவிதை. தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை தெரிந்துரைப்பது கவிதை. ஜூலை 27,1877 நவீன அணுக்கொள்கையின் தந்தை எனக் கருதப்படுகின்ற ஜான் டால்டன் மான்செஸ்டரில் காலமானார். ஜூலை 27,1879 நாவலர் சோமசுந்தர பாரதியார் பிறந்த நாள். வ.உ.சி.,யால் 'தமிழ்க் கப்பல்' என்று வர்ணிக்கப்பட்டவர் நாவலர் சோமசுந்தர பாரதியார்.  வழக்கறிஞராகப் பணியாற்றி  மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதித்த போதும் வ.உ.சி.,யின் அழைப்பை ஏற்று மாதம் 100 ரூபாய் ஊதியம் பெற்று கப்பல் கம்பெனியின் நிர்வாகப் ப...

ஜூலை 26

    ஜூலை 26,1878  தமிழறிஞரும் உரையாசிரியருமான  மு. இராகவையங்கார் இன்று பிறந்தார்.  வரலாற்று ஆய்வில் வரலாறு படைத்தவர் என்று போற்றப்பட்டவர். இலக்கிய ஆய்வில் புகழ்பெற்றவர். சிலாசனங்களை வெளியிட்டவர்.  செந்தமிழ் எனும் இதழில் 'வீரத்தாய்மார்' என்று  இவர்  எழுதிய கட்டுரைக்கு பாரதியே பாராட்டி எழுதியிருந்தார்.  'இருளிலேயே மூழ்கிக்கிடக்கும் பாரத வாசிகளுக்கு, மகாபாரதம் காட்டத் தோன்றியிருக்கும் சோதிகளில், உங்கள் நெஞ்சிற் பிறந்திருக்கும் நெருப்பும் ஒன்றாகும் '  என்று  பாரதி  பாராட்டி எழுதினார்.  வேளிர் வரலாறு, ஆழ்வார்களின் கால நிலை, சேரன் செங்குட்டுவன் உள்ளிட்ட நூல்களை படைத்தவர் ராகவையங்கார். ஜூலை 26,1911   கப்பலோட்டிய தமிழன் உள்ளிட்ட பல காலத்தால் அழியாத படங்களைத் தந்த திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர்  பி.ஆர்.பந்துலு பிறந்த தினம். ஜூலை 26,1941   எழுத்தாளர் வாஸந்தி பிறந்த தினம்.  ஜூலை 26,1977   கனடாவின்  கியூபெக் மாநிலத்தில் பிரெஞ்சு மொழி அதிகாரபூர்வ மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.  இன்றும் எந்த ஹாலிவுட்...

ஜூலை 25

ஜூலை 25,1908  திருமண விருந்துகள்,  ஹோட்டல்களில் பரிமாறப்படும்  பிரியாணி போன்ற அசைவ வகைகள்,  சைனீஸ் துரித உணவு வகைகள்  இங்கெல்லாம் சுவையைக் கூட்டப் பயன்படுத்தப்படும் அஜினமோட்டோ  டோக்கியோ பல்கலைக்கழகத்தில் இன்று தான் கண்டுபிடிக்கப்பட்டது.  உண்மையில் அஜினமோட்டோ என்பது இதன் பெயர் அல்ல. இதைக் கண்டுபிடித்த நிறுவனத்தின் பெயர். இதன் பெயர்  “மோனோ சோடியம் குளுட்டமேட்”.   இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வேதிப்பொருள் உணவில் பயன்படுத்தப்படுகிறது.  ஜூலை 25,1908  பிரபல கர்நாடக இசைப் பாடகர் செம்மங்குடி சீனிவாச ஐயர் இன்று பிறந்தார்.  ஜூலை 25,1925  சோவியத் யூனியனின் செய்தி நிறுவனம் "டாஸ்" இன்று தான் நிறுவப்பட்டது. ஜூலை 25,1978 உலகின் முதல் டெஸ்ட் டியூப் குழந்தையான    லூயிஸ்  ஜாய்  பிரவுன்  இங்கிலாந்தில் பிறந்தது.  ஜூலை 25,1987 ஆர் வெங்கட்ராமன் இந்தியாவின் எட்டாவது ஜனாதிபதியாகப் பதவியேற்றார். ஜூலை 25,1992 சங்கர் தயாள் சர்மா இன்று இந்தியாவின் ஒன்பதாவது ஜனாதிபதியாக பதவியேற்றார். ஜூலை 25, 2001...

ஜூலை 24

ஜூலை 24,1911 The Indian Institute of Science (IISC)  பெங்களூரில் இன்று தான் தொடங்கப்பட்டது .   General and Applied Chemistry மற்றும்   Electro technology  ஆகிய இரு துறைகளுடன் இன்று தொடங்கப்பட்டது .   ஜூலை 24,1924 தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர் திருச்சி லோகநாதன் பிறந்த நாள். வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய் போன்ற பல புகழ்பெற்ற பாடல்களைப் பாடியவர் திருச்சி லோகநாதன்.  ' பூங்கதவே தாள் திறவாய் ' என்ற பாடலைப் பாடிய தீபன் சக்ரவர்த்தி இவர் மகன்.  பக்திப் பாடல்கள் மூலம் புகழ்பெற்ற T.L.மகாராஜனும் இவர் மகன் தான்.  ஜூலை 24,1945 விப்ரோ கம்ப்யூட்டர்ஸ்  நிறுவனர்  அசிம் பிரேம்ஜி பிறந்த நாள்.   ஜூலை 24,1953  திரைப்பட நடிகை ஸ்ரீவித்யா பிறந்த நாள். ஜூலை 24,1969 நிலாவில் இறங்கிய அப்பல்லோ 11 விண்கலம் மூன்று விண்வெளி வீரர்களுடன் பாதுகாப்பாக பசிபிக் கடலில் இறங்கியது.  ஜூலை 24,1991 இந்திய அரசு தனது புதிய பொருளாதாரக் கொள்கையை அறிவித்தது.

ஜூலை 23

ஜூலை 23,1856 இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பால கங்காதர திலகர் பிறந்த தினம். ஜூலை 23,1875  தையல் மெஷினை கண்டுபிடித்த ஐசக் டெரிட் சிங்கர் இன்று இங்கிலாந்தில் காலமானார். ஜூலை 23,1893  ஃபோர்ட் கம்பெனி தயாரித்த முதல் ஃபோர்ட் கார் என்று விற்பனை செய்யப்பட்டது. ஜூலை 23,1908 பால கங்காதர திலகர் இன்று நாடு கடத்தப்பட்டு மாண்டலே சிறைக்கு அனுப்பப்பட்டார். ஜூலை 23,1921 சீனப் பொதுவுடமைக் கட்சி அதாவது சீன கம்யூனிஸ்ட் கட்சி இன்று தான்  ஆரம்பிக்கப்பட்டது. ஜூலை 23,1925 இந்திய விடுதலைப் போராட்ட வீரர்  சுப்பிரமணிய சிவா மறைந்த நாள்.  ஜூலை 23,1927 இந்தியாவில் முதன் முதலாக வானொலியில் வர்த்தக ஒலிபரப்பு  தொடங்கப்பட்டு தினசரி நிகழ்ச்சிகள் அஞ்சல் செய்யப்பட்டன.  அனைத்திந்திய வானொலியின் முதலாவது வர்த்தக வானொலி நிலையம் பம்பாய் நகரில்  (தற்போது மும்பை)  இன்று    இந்த   ஒலிபரப்பு சேவையை ஆரம்பித்தது. ஜூலை 23,1957 இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பெ. வர​த​ரா​ஜுலு நாயுடு மறைந்த நாள்.  ஜூலை 23, 1977 சென்னை வானொலியில் முதன்முதலாக இன்று FM (எஃப் எம்) ஒள...

ஜூலை 22

ஜூலை 22,1822 மரபியலின் தந்தை ( Father of Genetics)   என்று குறிப்பிடப்படும் கிரிகோர் ஜான் மெண்டல் இன்று ஆஸ்திரியாவில் பிறந்தார்.  ஜூலை 22,1933 தனியே உலகைச் சுற்றி வந்த முதல் மனிதர் வைலி போஸ்ட் 7 நாட்கள், 18 மணி, 45 நிமிடங்களில் உலகைச் சுற்றிமுடித்து இன்று  நியூயார்க்கை வந்தடைந்தார். ஜூலை 22,1947 மூவர்ணக் கொடி  இன்று  தான் இந்தியாவின்  தேசியக் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஜூலை 22,1968 இந்தியாவின் முதல் பெண் டாக்டர் ஆன திருமதி முத்துலட்சுமி ரெட்டி இன்று காலமானார். அப்போது அவருக்கு வயது 82. ஜூலை 22,2019 இந்தியாவில் சந்திரயான்-2 என்ற விண்கலம் நிலாவை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்டது. ஜூலை 22,1915 கவிஞர் வாணிதாசன் புதுவையை அடுத்த வில்லியனூரில் இன்று பிறந்தார்.  தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் அரங்கசாமி என்ற எத்திராசலு என்பதாகும்.  ஜூலை 22,1933 நெஞ்சிருக்கும் வரை உள்ளிட்ட காலத்தால் அழியாத திரைப்படங்களைத் தந்த திரைப்பட இயக்குநர் ஸ்ரீதர் பிறந்த தினம்.  ஜூலை 22,1953 திரைப்படப் பாடகி எஸ். பி. சைலஜா பிறந்த தினம். இவர் பிரபல பாட...

ஜூலை 21

ஜூலை 21,1883 இந்தியாவின் முதல் திரையரங்கம் ஸ்டார் தியேட்டர் கல்கத்தாவில் திறந்து வைக்கப்பட்டது.  ஜூலை 21,1899 "ஒவ்வொரு தொட்டிலும் எங்கே இருந்து வந்தேன் என்று கேட்கிறது; ஒவ்வொரு சவப்பெட்டியும் எங்கே போகிறேன் என்று கேட்கிறது" என்று கூறிய சிந்தனையாளர் இங்கர்சால் காலமானார். ஜூலை 21,1960 உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்ற சிறிமாவோ பண்டாரநாயக்கா இலங்கையின் பிரதமராக இன்று   பதவியேற்றுக் கொண்டார் .  ஜூலை 21,1969 நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் நடந்த முதல் மனிதர் என்று இன்று அறிவிக்கப்பட்டது.  ஜூலை 21,1889 மாயூரம் வேதநாயகம் பிள்ளை மறைந்த தினம்.    தமிழில் வெளியான முதல் நாவல் (புதினம்)  இவர் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் தான். ஜூலை 21,1984 தினமலர் செய்தித்தாள் நிறுவனர் டி.வி. இராமசுப்பையர் மறைந்த நாள். ஜூலை 21,2001 நடிகர்  சிவாஜி கணேசன் மறைந்த நாள். 

கழுதை வயது

 "கழுதை வயசாச்சு? இன்னும் பல்லியைக் கண்டால் பயம்" என நாலு பேருக்கு முன்பாக நம் வீரம் பறைசாற்றப்பட்ட அனுபவம் நமக்கு இருக்கும். அதிகமாகக் கோபம் வரும்போது கழுதை வயதையும் பல மடங்காக்கிக் கொள்பவர்களும் உண்டு. "ஏழு கழுதை வயசாச்சு இது கூடத் தெரியல" என்பதெல்லாம் அந்த ரகம்.  இந்தக் கழுதை வயது வசைகளுக்கு யாரெல்லாம் பொருத்தமானவர்கள்?  கரப்பான் பூச்சியைப் பார்த்துவிட்டு ஊரைக் கூட்டும் அளவு கூச்சல் போடுபவர்கள்... பாதி குளித்த நிலையில் பல்லியைப் பார்த்துவிட்டு பதறி அடித்து வெளியே ஓடி வருபவர்கள்... படுக்கையைக் கூட மடித்து வைக்காமல் காப்பி கேட்டு சமையலறைக்குப் போகின்றவர்கள்... பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த பின்பும் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்துவிட்டு எதுவும் தெரியாதது போல இருக்கும் குழந்தைகள்... ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் எப்போதும் கை சூப்பிக்கொண்டிருப்பவர்கள்... வீட்டில் யாரும் இல்லாத போதும் சாப்பிட்ட தட்டைக் கூட கழுவாமல் போட்டு வைத்திருக்கும் மன்னார்சாமிகள்... அருகே இருக்கும் மளிகைக் கடைக்குக் கூடத் தனியாகப் போகத் தெரியாதவர்கள்... இப்படி இந்தக் கழுதை வயதுப் பட்டத்துக்குத்...

Though there is no வில் there is a way....

 அது போர்க்களம். சூர்ப்பனகை சொன்னதால் ராமனைப் பழிவாங்க வேண்டும் என்று வந்தது கரன் என்ற அரக்கர் படை.  அரக்கர்களுக்கும் ராமனுக்கும் இடையே போர் நடக்கிறது. ராமன் விட்ட அம்பால் வில்லை இழந்து விடுகிறான். வில் இழந்து விட்டான். அவ்வளவுதான் என்று கூறுகிறது பாடல். அதாவது, வில்லை இழந்து விட்டான். இனி அவன் அவ்வளவு தான் என்று நாம் நினைத்திருக்க... வில்லை இழந்து விட்டான் அவ்வளவு தானே!  என கம்பன் ஒரு புதிய கோணத்தைச் சொல்வான். அது என்ன? வில் இழந்தனன் என்னினும், விழித்த வாள் முகத்தின் எல் இழந்திலன்; இழந்திலன் வெங் கதம், இடிக்கும் சொல் இழந்திலன்; தோள் வலி இழந்திலன்; சொரியும் கல் இழந்திலன்; இழந்திலன் கறங்கு எனத் திரிதல்.  (கம்ப இராமாயணம் - ஆரண்ய காண்டம்) வில் இழந்து விட்டான். அவ்வளவு தான். ஆனால் அவன் இழக்காதது பல . வில்லை இழந்த பின்னும் அவன் முகத்தில் நம்பிக்கைப் பிரகாசம் குறையவில்லை. வில்லை இழந்த பின்னும் சினம் கொப்பளிக்கும் அவன் குரலை இழக்கவில்லை. வில்லை இழந்த பின்னும் தினவெடுக்கும் அவன் தோள் வலிமையை இழக்கவில்லை. வில் இல்லாத போதும் அவன் வீசுகின்ற பாறைகள், கற்கள்  எண்ணிக்கையில...

ஜூலை 20

ஜூலை 20,1903 போர்டு நிறுவனம் தனது முதலாவது காரை  இன்று   ஏற்றுமதி செய்தது. ஜூலை 20,1920 சீதாமலைக்கும் பாலமலைக்கும் இடையே இன்று தான் மேட்டூர் அணை கட்ட ஆரம்பிக்கப்பட்டது. இதன் நீளம் 5300 அடி உயரம் 176 அடி. ஜூலை 20,1937 வானொலியைக் கண்டுபிடித்த மார்க்கோனி இன்று ரோம் நகரில் காலமானார். ஜூலை 20,1960  சிறிமாவோ பண்டாரநாயகா இலங்கையின் பிரதமராகத் தெரிவானார்.  உலகிலேயே முதன் முதலாகத் தேர்வு செய்யப்பட்ட பெண் பிரதமர் என்ற சாதனைக்கு இன்று  சொந்தக்காரர் ஆனார் அவர். ஜூலை 20,1969 நீல் ஆம்ஸ்ட்ராங் , எட்வின் ஆல்ட்ரின் ஆகியோர் நிலவில்  காலடி வைத்தனர். நாசாவின் அப்பல்லோ 11 விண்கலம் மூலம் நிலவில் இறங்கிய அவர்கள் நிலவில் இறங்கிய முதல் மனிதர்கள் என்ற பெருமையை இன்று பெற்றனர்.  ஜூலை 20,1919 உலகின் மிக உயரமான சிகரமான எவெரெஸ்ட்டின் உச்சியை அடைந்த முதல் மனிதர்கள் டென்சிங் மற்றும் ஹில்லாரி ஆகிய இருவர்.  அந்த இருவரில் ஒருவரான எட்மண்ட் ஹிலாரி இன்று தான் பிறந்தார்.  முதன் முதலில் உலகின் தென் துருவத்தை அடைந்தவர் என்ற பெருமைக்குரியவரும் இதே ஹிலாரி தான்.   உலகின்...

ஜூலை 19

 ஜூலை 19,1827 இந்திய விடுதலைப் போரில் முக்கியமான நிகழ்வான  சிப்பாய் க ல கத்துக்கு மூலமாக விளங்கிய மங்கள் பாண்டே பிறந்த தினம். ஜூலை 19 ,1918 அரசியல் நடவடிக்கையை கடுமையாக ஒடுக்க வேண்டும் என்ற பரிந்துரையுடன் கூடிய ரவுலட் தயாரித்த அறிக்கை இன்று வெளியானது. ஜூலை 19 ,1947  தமிழறிஞர்  சுவாமி விபுலாநந்தர் இன்று மறைந்தார்.   இவர்  இலங்கையில் பிறந்த இவர் ஒரு சிறந்த தமிழிசை ஆய்வாளர். திரிகோணமலை இந்துக் கல்லூரியில் பாரதி படத்தைப் பார்த்த ஒருவர் இவரிடம் கேட்டார். 'யார் இந்த தலைப்பாக்கட்டு ஆசாமி' என்று? அதற்கு பதில் அளித்த விபுலானந்தர், 'தமிழனாகப் பிறந்திருந்தால், இந்த பெருங்கவிஞனைத் தெரியாமல் இருக்க முடியாது. பாரதியை அறியாதவன் தமிழன் என்று  சொல்லி க் கொள்ள வெட்கப்பட வேண்டும்' என்று கூறியவர். இவர் எழுதிய  'யாழ் நூல்'  என்ற இசைத் தமிழ் பற்றிய முழுமையான ஆய்வு நூலை,  கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் திருக்கொள்ளம்பூதூர் கோயிலில் திருஞானசம்பந்தர் சந்நிதானத்தில்  தேவாரப்பண்களைத் தாமே அமைத்து 1947-ஆம் ஆண்டு ஆனி மாதம் அரங்கேற்றினார்.  அந்த...

ஜூலை 18

  ஜூலை 18, 1857   சென்னைப் பல்கலைக்கழகம், மும்பை பல்கலைக்கழகம் மற்றும் கல்கத்தா பல்கலைக்கழகங்கள் ஆகியவை இன்று நிறுவப்பட்டன. ஜூலை 18, 1898  கதிரியக்கமுடைய ஒரு தனிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு போலோனியம் என்று பெயரிட வேண்டும் என்றும் மேரி கியூரியும் அவரது கணவர் பியாரி கியூரியும் பாரிஸ் அகாடமி ஆப் சயின்ஸ்க்கு அறிவித்தனர். ஜூலை 18, 1918  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தென்னாப்பிரிக்காவின் முதல் குடியரசுத்  தலைவரும் தன் வாழ்நாளில்  27 வருடங்களை சிறையில் கழித்தவருமான நெல்சன் மண்டேலா இன்று தான் பிறந்தார்.  ஜூலை 18, 1925 ஹிட்லரின் 'மெயின் காம்ப்' என்னும் நூல் வெளியிடப்பட்டது. ஜூலை 18, 1968 இன்டெல் நிறுவனம் மவுண்ட் கலிபோர்னியாவில் இன்று நிறுவப்பட்டது. ஜூலை 18, 1974 தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் தனி முத்திரை பதித்த  எஸ். வி. ரங்கராவ்  மறைந்த தினம்.  தன்னுடைய உண்மையான வயதை விட அதிகமான வயது கதாபாத்திரங்களிலேயே நடித்த பெருமைக்குரியவர் அவர்.  ஜூலை 18, 2013 கவிஞர் வாலி மறைந்த தினம்.   சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல...

கிதார்க் கிணறு

அன்னம் போல நடை ... முல்லைக்கொடி போல மெல்ல வளையும் இடுப்பு ... இப்படிக் காலம் காலமாக  ஒப்பிடுகிறார்கள்; பாடி வருகிறார்கள்.  இதற்கு இதுதான் பொருத்தம் என்று ஒருவர் முதலில் எழுத, அடுத்து வந்தவர்களும் அப்படியே எழுத, அது  எப்படியோ ஒரு மரபாக மாறிவிட்டது. அப்படி இல்லாமல் சில நேரங்களில் வினோதமான ஒப்பீடு நம் கண்ணில்படும்.   கிதார் ஒரு கிணறு  நீரின் இடத்தில் காற்று   என்பது அப்படிப்பட்ட ஒன்று. கிதார் ஒரு வாத்தியம்.  கிணற்றுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?  காற்றும் நீரும் இயல்பில் வேறு வேறு.   அதை எப்படி ஒப்பிடுவது?  அப்படி இல்லை; இரண்டையும் ஒப்பிடலாம்.  இரண்டிலும் ஆழமான ஒப்புமைகள் இருக்கின்றன என்று அப்துல் ரகுமான் விளக்குவார். இந்தப் பாடல் வரிகள் அவருடையது அல்ல.  இது ஜெரார்டோ என்ற ஒரு ஸ்பெயின் கவிஞர் எழுதியது.  அதற்கு விளக்கம் மட்டுமே அப்துல் ரகுமான் சொன்னது. இது தான் அவர் சொன்ன விளக்கம். கித்தாரையும் கிணற்றையும் ஒப்புமையாகப் பார்க்கலாம்.  கிதார், கிணறு இரண்டும் மனிதனின் தாகத்தின் காரணமாகத் தோன்றியவை.  உடலில் தாகம் ...

காதல் சிறகை காற்றினில் விரித்து

  இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள். மென்மையான சாரல் மழை... எங்கும் குளிர்ச்சியாக இருக்கிறது. எங்கள் ஊரெல்லாம் பச்சைப் பசேலென இருக்கிறது.  கரும்பு முற்றி வளர்ந்து அதன் தோகை அசைந்து ஆடுகிறது.  புதிதாக திருமணம் ஆகி வந்த சில நாட்களில் என்னை விட்டு வேலை காரணமாக அவன் பிரிந்து போக வேண்டி இருந்தது.  அவனும் செய்து முடிக்க வேண்டிய வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு இதோ இன்று வந்துவிட்டான். அவனைக் கண்டதும் ஓடோடி வந்து அவனை கட்டித் தழுவிக் கொள்ளவேண்டும் போல ஆசை. இத்தனை காலம் பிரிந்திருந்ததை எண்ணி கண்ணீர் பொங்கி வருகிறது.  கண்ணைத் துடைத்துக் கொள்கிறேன்.  அவனோ மெல்லச் சிரிக்கிறான்.  என் கண்ணை நினைத்து எனக்கே வெட்கம் வருகிறது.  அவன் பிரிந்து போகும் போது கண்ணீர் வந்திருக்க வேண்டும். ஆனால் இப்போது அவனைக் கண்ட பின்பு கண்ணீர் வருகிறது.    "இந்தக் கண்ணுக்கு ஒரு நாணம் இல்லை. அழ வேண்டிய நேரத்தில் அழாமல் இப்போது அழுகிறேதே "  நாணில மன்றவெங் கண்ணே நாணேர்பு சினைப்பசும் பாம்பின் சூன்முதிர்ப் பன்ன கனைத்த கரும்பின் கூம்புபொதி யவிழ நுண்ணுறை யழி துளி தலைஇ...

ஜூலை 16

  ஜூலை 16,1907 தன்னுடைய மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் மூலம் பல வெற்றிப் படங்களைத் தயாரித்த  திரைப்பட இயக்குநர் டி. ஆர். சுந்தரம் இன்று பிறந்தார். ஜூலை 16, 1909 விடுதலைப் போராட்ட  வீரர் அருணா ஆசஃப் அலி  பிறந்த நாள்.  ஜூலை 16,1929 ICAR, the Indian Council of Agricultural Research  அமைப்பு இன்று உருவாக்கப்பட்டது.  ஜூலை 16,1947 பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இந்திய விடுதலைச் சட்ட மசோதா நிறைவேறியது.  ஜூலை 16,1968 தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட, புகழ் பெற்ற இந்திய ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை பிறந்த நாள்.  ஜூலை 16,2004 கும்பகோணத்தில் பள்ளியொன்றில் இன்று நடந்த தீ விபத்து பல குழந்தைகளின் இழப்புக்குக் காரணமானது.   ஜூலை 16, 2009 கர்நாடக சங்கீதத்தில் பெரும் புகழ்பெற்ற பாடகியாக விளங்கிய  டி.கே.பட்டம்மாள் இன்று மறைந்தார்.  மேடைக் கச்சேரிகளில் பெண்களையே பார்க்க முடியாத காலத்தில்  டி. கே. பட்டம்மாள்,  எம். எஸ். சுப்புலட்சுமி, எம். எல். வசந்தகுமாரி மூவரும்  மேடைக் கச்சேரிகள் செய்து  புகழ்பெற்றவர்கள்.  டி. கே. பட்டம்ம...

ஜூலை 17

 ஜூலை 17, 1790 லண்டனைச் சேர்ந்த தாமஸ் செயின்ட்  என்பவர் தையல் மெஷின் தயாரிப்பதற்கான காப்புரிமம் பெற்றார். ஜூலை 17, 1790 உலகப் புகழ் பெற்ற    பொருளியலாளர் ஆடம் ஸ்மித் ஸ்காட்லாந்தில் காலமானார். ஜூலை 17, 1841 பஞ்ச் என்னும் நகைச்சுவை பத்திரிகையின் முதல் இதழ் இன்று லண்டனில் இருந்து வெளிவந்தது. ஜூலை  17, 1955 வால்ட் டிஸ்னி கலிபோர்னியாவில் டிஸ்னிலாண்ட்டைத் திறந்து வைத்தார்.

அழகுச் சொற்கள்

  வாகான உடம்பு, வாளிப்பான தேகம் என்று கதைகளில் குறிப்பிடுவார்கள். வாட்டசாட்டமாக இருப்பான் என்பதும் உண்டு.  வாகு என்பது நன்கு வகுக்கப்பட்ட திடமான உடம்பு என்று அதன் அமைப்பை வைத்துச் சொல்லப்படுகிறது.    வாளிப்பு வளர்ச்சியை காட்டும் திரட்சியுடைய உடலமைப்பு.  வாகான என்பதை ஆண்களுக்கும் வாளிப்பு என்பதை பெண்களுக்கும் பயன்படுத்துவது பேச்சு மரபு. வாட்டசாட்டம் மெலிய வேண்டிய இடம் மெலிந்தும் பருக்க வேண்டிய இடம் பருத்தும் காணப்படுவது. கொள்ளை அழகு என்பது கண்டவர் மனத்தைக் கொள்ளை கொள்ளுவது. கொள்ளை என்றால் மிகுதி என்றும் பொருள் உண்டு.  கட்டழகு என்பது உடம்பின் கட்டமைப்பால் கிடைக்கும் தோற்றப்பொலிவு.  அடிக்கடி மூக்கும் முழியும் என்பார்கள். மூக்கும் விழிகளும் முன்னிற்பவை. முகத்தின் அழகுக்கு முக்கியமானவை. அவை ஏனைய காது உதடு பல்வரிசை போன்ற உறுப்புகளையும் குறிக்கும்.  முக அழகையே அதாவது முகக் களையையே அவ்வாறு குறிப்பிடுவர். களையான முகம் களையான தோற்றம் என்பார்கள். "கறுப்பா இருந்தால் என்ன, பார்க்க களையாக இருக்கிறானே" என்று போற்றிக் கூறுவர்.  களை என்பது பார்ப்பவர்களுக்...

Twinkle, Twinkle, Little Star

 பிறந்த குழந்தைகள் பள்ளிக்குப் போகும் முன்பே இப்போதெல்லாம் rhymes கற்றுக் கொள்கின்றனர். குழந்தையை தொட்டிலுக்குள் வைத்து விட்டு,  மொபைல் போனில் rhymes பாட வைத்து அதையும்  தொட்டிலுக்குள்ளேயே வைத்துவிட்டால் தாலாட்டுப் பாட்டெல்லாம் அவசியப்படாத அளவுக்கு rhymes ஆதிக்கம் செலுத்துகிறது. இன்றைய தேதியில் அங்கிங்கெனாதபடி உலகத்தின் எல்லா மூலைகளில் இருக்கும் எல்லாக் குழந்தைகளும் சொல்லி வைத்தாற்போல சில rhymes பாடுகிறார்கள் அதாவது அவர்களுக்கு பாடக் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அந்த லிஸ்டில் உள்ள சில rhymes இவை. Baa,Baa Black sheep Ding Dong Bell Cock a Doodle Doo Sing a song of six pence  Hickory Dickory Dock Humpty Dumpty sat on a wall Jack and Jill Little Jack Horner One, two buckle my shoe Pussy cat, Pussy cat where have you been? Twinkle, Twinkle, Little Star இந்த rhymes  தான் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று எப்படி முடிவு செய்தார்கள்? யார் சொல்லி இப்படிப் பாடிக்கொண்டிருக்கின்றன ஊரில் உள்ள எல்லாக் குழந்தைகளும்? அதெல்லாம் ஒரு மரபு.  பாதை இல்லாத இடத்தில் முதலில் நடந்து போன...

ஜூலை 15

ஜூலை 15, 1815 வாட்டர் லூ போரில் தோல்வி அடைந்த நெப்போலியன் இன்று பிரிட்டிஷாரிடம் சரணடைந்தார். ஜூலை  15,  1876   மறைமலை அடிகள் பிறந்த நாள். பெற்ற தாய் தனை மக மறந்தாலும்... உற்ற தேகத்தை உடல் மறந்தாலும்... எனும் வள்ளல் ராமலிங்க அடிகளாரின் பாடலை பாடிக் கொண்டிருந்த மறைமலை அடிகளார், இடையில் நிறுத்தி - 'உற்ற யாக்கையை உடல் மறந்தாலும்' என்று பாடியிருந்தால் சிறப்பாக இருக்குமே என்று கருதினார்.  தேகம் என்ற வடமொழிச் சொல் நீங்கி, யாக்கை எனும் தூய தமிழ் சேரும் என்பதால்  மகிழ்வுற்ற அவர்  அந்தத் தினத்திலிருந்து வேற்று மொழி கலவாமல் தமிழ் பேசுவோம் என்று தன் குடும்பத்தாரிடம் கூறினார். இதுவே, அவரது தனித்தமிழ் இயக்கத்தை வலுவூட்டியது.  சுவாமி வேதாச்சலம் என்ற தனது பெயரை மறைமலை அடிகள் என்று மாற்றிக் கொண்டார். சமரச சன்மார்க்க நிலையம் என்றிருந்த அவரது அமைப்பை 'பொது நிலைக்கழகம்' என்றும் மாற்றிக் கொண்டார். ஜூலை 15, 1903 காமராஜர் பிறந்த நாள். நாட்டு விடுதலைக்காக 9 ஆண்டுகள் சிறையிலிருந்தவர்.  பல்கலைக்கழகப் படிப்போ, பட்டமோ பெறாதிருந்தும், தனிப்பட்ட முறையில் ஏராளமான நூல்களை...