Skip to main content

அரசாள 56" மார்பளவு வேண்டுமா ?

அரசியல் தலைவர்கள் தங்கள் பிரச்சாரத்தில் 56 இன்ச் மார்பளவைப் பற்றிப் பேசியதைக் கவனித்திருப்போம்.

56 இன்ச் மார்பளவு என்பது டெய்லர் எடுக்கும் சட்டை அளவுக்காகச் சொல்லப்படுவதல்ல. 

அது வலிமையான தலைமைப் பண்பிற்கும் தன்னம்பிக்கைக்கும் கூறப்படும் ஒரு குறியீடு. 

Metaphorical expression போல அதைச் சொல்லலாம். 

ஒரு நாட்டின் தலைவன் என்றால் ஓய்வும் உறக்கமும் இல்லாமல் சோர்வாக  இருந்தாலும் ஓயாது உழைக்க வேண்டும்.  

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயத்திலும் நூற்றுக்கணக்கான ஆலோசனைகள் வரும்.  

அதில் முடிவெடுக்கும் திறன், வருமுன் அறிதல், விளைவுகளை எதிர்கொள்ளுதல், கடினமான நேரங்களில் தன்னிலை பிறழாமல் துவண்டு போகாமல் பிரச்னைகளை எதிர்கொள்ளும் சாதுரியம் என எல்லாவற்றுக்குமான குறியீடு அது.

56 இன்ச் மார்பளவு என்பது என்னவோ உடல் அளவைச் சொல்வதாக நினைத்துக் கொண்டு குழம்பிக் கொள்பவர்களும் உண்டு.

கம்ப இராமாயணம் கூட இந்த மார்பளவைப் பற்றிக் கூறுகிறது.

காதோரம் வெள்ளை முடி வந்தவுடன் தசரதன் தனக்கு முதுமை வந்துவிட்டது என்று கருதுகிறான்.

தான் இத்தனை ஆண்டுகளாகச் சுமந்த அந்த அரச பாரத்தைத் தாங்க வேண்டும் என்றால் அதற்கேற்ப ராமன் வலிமை பெற்றிருக்க வேண்டும் என்று நினைக்கிறான்.

அந்த வலிமை ராமனுக்கு உள்ளது என்பதையும்  தசரதன் உறுதி செய்துகொள்கிறான். 

எப்படி?

"நலங்கொள் மைந்தனைத் தழுவினன் என்பதென் நளிநீர் 

நிலங்கள் தாங்குறு நிலையினை நிலையிட நினைந்தான் 

விலங்கல் அன்னதிண் தோளையும், மெய்த்திரு இருக்கும் 

அலங்கல் மார்பையும் தனதுதோள் மார்பு கொண்டு அளந்தான்' 

தசரதன் தன் மகன்  ராமனைத் தழுவினான். 

தழுவியது எதற்காக?

தன் தோளைக் கொண்டு ராமன் தோளை அளக்க!

தன் மார்பளவைக் கொண்டு ராமன் மார்பளவைக் கண்டுகொள்ள!

இப்படி ஆரத் தழுவும்போதே ராமனின் பரந்த தோளையும் அகன்ற மார்பையும் அளந்து அதில் திருப்தியுற்றவனாக அரச பதவியை ராமனிடம் ஒப்படைத்துவிட்டு தவம் செய்ய விரும்புகிறான். 

ஆங்கிலத்தில் இந்தத் தலைமைப் பண்பைக் குறிக்க broad sholders என்று சொல்லுவார்கள்.

He has broad sholders என்றால் அவனுக்கு அரசாங்கத்தை நடத்தும் திறமை இருக்கிறது. கடினமான பொறுப்புகளைத் திறம்படச் செய்யும் சாதுர்யம் இருக்கிறது என்று பொருள்.

கிருபானந்த வாரியார் ஒரு முறை இந்தப் பாட்டுக்கு இப்படி விளக்கம் சொன்னார்.

"தன் மகன் ராமன் சரியானபடி தான் இருக்கிறான் என்பதை அவனை மார்போடு அணைத்து தசரதன் உறுதிப்படுத்திக் கொண்டான்.

இன்றும் கூட தந்தையர்கள் அப்படிச் செய்வது உண்டு.  தங்கள்  மகனை ஆரத் தழுவிக் கொள்வதுண்டு. 

அப்படித் தழுவிக் கொள்ளும் போது மகன்  சட்டைப் பையில் அக்னி காரியம் செய்கின்ற பெட்டி ஏதாவது இருந்தால் அது தந்தையின் மார்பில் உறுத்தும்.

அப்படி ஒன்றும் உறுத்தவில்லை என்றால் 'தன் மகன் நலங்கொள் மைந்தன்' என்று தந்தை அறிந்து கொள்ளலாம்" 

என்று விளக்கம் சொன்னார் வாரியார்.


அக்கினி காரியம் செய்கின்ற பெட்டி என்று வாரியார் சொன்னது சிகரெட் பிடிக்கப் பயன்படுத்தும் தீப்பெட்டி எனப் புரிந்து கொள்ள பொழிப்புரை எல்லாம் தேவையா என்ன?


இப்படி, 

பரந்த தோளும் அகன்ற மார்பும் தான் நம் நாட்டில் ஆட்சித் தலைவர்களுக்கு இலக்கணம். அது சரி தான்.

ஆனால், 

அமெரிக்காவில்  ஜனாதிபதிகளின் மார்பளவுகளை யாரும் கவனிப்பதில்லை. லிங்கன் போன்ற ஒல்லியான உடல்வாகு கொண்ட ஜனாதிபதிகள்  நிறையப் பேர் இருந்துள்ளனர். 

அதிக உயரம் வளர்ந்தவர்கள் தான் ஜனாதிபதி ஆக வேண்டும் என்று அமெரிக்க மக்கள்  தனியான ஒரு  இலக்கணம் வைத்திருப்பார்கள் போல. 

அமெரிக்க ஜனாதிபதிகள் பெரும்பாலும் ஆறடிக்கும் குறையாத உயரம் உடையவர்கள். 

ஆபிரகாம் லிங்கன் அநியாயத்துக்கு உயரம். 6 அடி 4 அங்குலம் உயரமுடையவர். அதாவது 193 cm.

டொனால்ட்  ட்ரம்ப் மட்டும் என்னவாம். 6 அடி 3 அங்குலம் உயரமுடையவர். அதாவது 190 cm.

பில் கிளின்டன் 6 அடி 2.5 அங்குலம் உயரமுடையவர். அதாவது 189cm.

பராக் ஒபாமா  6 அடி 1.5 அங்குலம் உயரமுடையவர். அதாவது 187 cm.

ஜான் கென்னடி 6 அடி 1 அங்குலம் உயரமுடையவர். அதாவது 185 cm.

ரொனால்ட் ரீகன் 6 அடி 1 அங்குலம் உயரமுடையவர். அதாவது 185cm.

ஜார்ஜ் புஷ்  6 அடி 2 அங்குலம் உயரமுடையவர். அதாவது 188 cm.

ஜார்ஜ் வாஷிங்டன்  6 அடி 1.5 அங்குலம் உயரமுடையவர். அதாவது 187 cm.

"ஓங்கி உலகளந்த உத்தமன்" என்பது ஆண்டாள் வாக்கு. 

  

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...