ஜூன் 28 1856
மதராஸ் ரயில்வே அன்றைய கவர்னர் ஹாரிசால் துவக்கி வைக்கப்பட்டது. ராயபுரத்தில் முதல் பிளாட்பாரத்தையும் அவர் திறந்து வைத்தார்.
ஜூன் 28,1921
முன்னாள் பிரதமர் பி. வி. நரசிம்ம ராவ் பிறந்த தினம்.
தென் இந்தியாவைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமைக்கும் உரியவர் இவர்.
இவர் கொண்டிருந்த உறுதி தான் இந்தியாவின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்குக் காரணம்.
பத்து மொழிகளுக்கு மேல் சரளமாகப் பேசவும் பிழையில்லாமல் எழுதவும் முடிந்த ஒரே பிரதமர் இன்றளவும் இவர் மட்டுமே.
அதிகம் பேசாமல் தன்னுடைய பணியில் மட்டுமே கவனம் கொண்டிருந்த அசாத்தியமான ஆளுமை இவர்.
ஜூன் 28, 1951
நேரு பஞ்சசீலக் கொள்கையை வெளியிட்டார்.
ஜூன் 28, 1965
Early Bird என்ற நிறுவனம் முதன்முதலாக வர்த்தக ரீதியிலான தொலைக்காட்சி ஒளிபரப்பைத் தொடங்கியது. பூமத்திய ரேகைக்கு மேல் 36,000 கிலோமீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தப்பட்ட செயற்கைக்கோள் இந்த ஒளிபரப்புக்கு மூலமாக விளங்கியது.
ஜூன் 28, 1972
இந்திய அறிவியல் அறிஞர் பிரசண்ட சந்திரா (Prasanta Chandra Mahalanobis) கல்கத்தாவில் இன்று மறைந்தார்.

Comments
Post a Comment
Your feedback