அனல் அடிக்கும் வெய்யில் காலம்.
ஆனாலும் ஆலமரத்தில் பழங்கள்.
புத்தம்புது குட்டி மண்பானைகள் போல
அழகான அந்தப் பழங்கள்...
நாடி வந்த எந்தப் பறவையையும்
போக மனதில்லாமல்
மரத்திலேயே தங்கச் செய்கின்றன.
நீ பாவம்...
அந்த அனலில் கொடிய வழியில் பொருள் தேடப் போகிறாய்.
எல்லாம் சரி தான்.
இவளை இங்கு விட்டு விட்டு நீ மட்டும் தனியே போய் கஷ்டப் படுவதை நினைத்து இவள் எப்படி நிம்மதியாக இருப்பாள்.
இவளையும் அழைத்துப் போ.
உன் வழியெல்லாம் இனிமை தவழட்டும்.
புதுக் கலத்தன்ன கனிய ஆலம்
போகில்தனைத் தடுக்கும் வேனில் அருஞ் சுரம்
தண்ணிய இனிய ஆக;
எம்மொடும் சென்மோ, விடலை! நீயே.
(ஐங்குறுநூறு 303)
Comments
Post a Comment
Your feedback