ஜூன் 10, 1858
பிரௌனியன் இயக்கத்தை கண்டுபிடித்த பிரிட்டிஷ் தாவரவியல் விஞ்ஞானி ராபர்ட் பிரவுன் லண்டனில் காலமானார்.
ஜூன் 10, 1912
கர்நாடக சங்கீத உலகில் கோலாச்சியவர்களுள் முக்கியமானவரான
பாலக்காடு டி. எஸ். மணி ஐயர் பிறந்த நாள்.
மிருதங்க வித்வானான இவர் செம்பை வைத்தியநாத பாகவதர்,
அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், டி. கே. பட்டம்மாள், மதுரை மணி ஐயர், எம். எல். வசந்தகுமாரி, மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் போன்றவர்களின் கச்சேரிகளில் மிருதங்கம் வாசித்துப் புகழ்பெற்றவர்.
ஜூன் 10, 1935
அனைத்திந்திய வானொலியின் முதலாவது தமிழ் பெண் செய்தி வாசிப்பாளரான சரோஜ் நாராயணசுவாமி பிறந்த தினம்.
ஆகாஷ்வாணி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி என்ற வசீகரமான குரல் நினைவிருக்கும். செய்தி என்றாலே இந்தக் குரல் தான் என்று எல்லோர் மனதிலும் பதிய வைத்த சரோஜ் நாராயணசாமி ஆகஸ்ட் 13,2022 அன்று மறைந்தார்.
ஜூன் 10, 1952
கிரேசி மோகன் மறைந்த நாள்.
கிரேசி மோகன் ஒரு தொழில் முறை என்ஜினீயர் . இருந்த போதும் மேடை நாடகங்களில் புகழ் பெற்றவர். இவரது எல்லா நாடகங்களிலும் இவரது சகோதரர் மாது பாலாஜி இருப்பர்.
கமல்ஹாசன் இவரை தன்னுடைய படங்களுக்கு கதை வசனம் எழுதச் சொன்னதன் மூலம் திரைப்பட வசனகர்த்தா ஆனார். அபூர்வ சகோதரர்கள் , மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இவர் கதை-வசனம் எழுதியுள்ளார். அப்படங்கள் வெற்றி பெற இவரது நகைச்சுவை வசங்கள் முக்கியக் காரணம்.
Comments
Post a Comment
Your feedback