ஜூன் 19,1623
ஃப்ரெஞ்ச் அறிவியல் அறிஞர் Blaise Pascal பிறந்த தினம்.
SI முறையில் அழுத்தத்தை (Pressure) குறிக்கும் அலகான pascal என்பது இவரைக் கௌரவிக்கும் நோக்கில் குறிப்பிடப்படும் அலகு.
ஜூன் 19,1945
அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் தற்போது இராணுவத்தால் சிறையில் வைக்கப்பட்டுள்ளவருமான Aung San Suu Kyi ஆங் சான்சூஹி பிறந்த தினம்.
ஜூன் 19,1961
பிரிட்டனிடமிருந்து குவைத் சுதந்திரம் பெற்றது.
சிவசேனா இயக்கம் இன்று மும்பையில் ஆரம்பிக்கப்பட்டது.
ஜூன் 19,1970
காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி பிறந்தநாள்.
ஜூன் 19,1990
சென்னை கோடம்பாக்கத்தில் தமிழ் ஈழ புரட்சி விடுதலை முன்னணி தலைவர் பத்மநாபன் உட்பட 14 பேர் விடுதலைப் புலிகள் இயக்கத் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சூன் 19, 2020
எங்கிருந்தாலும் வாழ்க
உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க
உன் மங்கலக் குங்குமம் வாழ்க
வாழ்க...வாழ்க...
என்ற அமரத்துவம் வாய்ந்த பாடலைப் பாடிய பாடகர் நடிகர் A. L. ராகவன் மறைந்த தினம்.
கொரோனா கொள்ளை கொண்ட ஆளுமைகளுள் இவரும் ஒருவர்.

Comments
Post a Comment
Your feedback