ஜூன் 25, 1975
பிரதமர் இந்திரா காந்தி இன்று நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அறிவித்தார். இன்று குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது அந்த ஆணையை வெளியிட்டார். 1975 ஜூன் 25 முதல் 1977 மார்ச் 21 முடிய இருபத்தொரு மாதங்கள் இந்த நெருக்கடி நிலை அமலில் இருந்தது.
ஜூன் 25, 1984
அமிர்தசரஸ் பொற்கோயில் பொதுமக்களுக்கு திறந்து விடப்பட்டது.
ஜூன் 25, 1990நெல்லை மாவட்டம் தென்காசியில் உள்ள உலகம்மை காசி விசுவநாதர் கோவில் ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடந்தது.
178 அடி உயரமும் ஒன்பது நிலைகளையும் கொண்டு இந்த ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. அன்றைய நாளில் ஒரு கோடி ரூபாய் செலவாயிற்று.
ஜூன் 25, 2025
இந்திய விண்வெளி வீரர் சுபான்சு சுக்லா சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்குப் புறப்பட்டுச் சென்று வெற்றிகரமாக பூமியை வந்தடைந்தார். ராகேஷ் ஷர்மாவுக்குப் பிறகு விண்வெளிக்குச் சென்ற இந்தியர் என்ற பெருமையை சுக்லா இன்று பெற்றார்.


Comments
Post a Comment
Your feedback