Skip to main content

யாரும் ரசிக்கவில்லையே!

 

நிலா காய்கிறது

நேரம் தேய்கிறது

யாரும் ரசிக்கவில்லையே

என்று கேட்கும் ஒரு பாடல். 


பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் ரசிக்க நாளும் நாளும் எத்தனையோ விஷயங்கள் நம்மைக் கடந்து போகின்றன.

போய்க்கொண்டிருக்கின்றன.

ஏதோ ஒன்றால் பிணைக்கப்பட்டு

அதை மட்டுமே பற்றிக்கொண்டு 

ஓடிக்கொண்டே இருப்பதால்

கடந்துபோகும் எதையும் நம்மால் காண முடிவதில்லை. கண்டாலும் அதன் அழகு மனசுக்குள் போவதில்லை.


இப்படி இருந்தால் எப்படி? என்று கேட்கிறது இந்தக் கவிதை. 


Leisure என்ற தலைப்பில் W. H. Davies எழுதியது இது.


What is this life if, full of care,

We have no time to stand and stare?

No time to stand beneath the boughs,

And stare as long as sheep and cows:

No time to see, when woods we pass,

Where squirrels hide their nuts in grass:

No time to see, in broad daylight,

Streams full of stars, like skies at night:

No time to turn at Beauty's glance,

And watch her feet, how they can dance:

No time to wait till her mouth can

Enrich that smile her eyes began?

A poor life this if, full of care,

We have no time to stand and stare.

(W. H. DAVIES)


என்ன தான் வாழ்க்கை இது!

எதிலேயோ கவனம்.

ஒன்றையும் நின்றுபார்க்க நேரமில்லை.


மரத்தடி நிழலில்

ஆடும் மாடும் ஊன்றிய கவனத்தில் அசைபோடுவதை அருகிருந்து பார்க்க நேரமில்லை.

காட்டு வழியே போகும்போதும்

பழத்தைத் தின்றபின்

கொறித்த அந்தக் கொட்டையை அணில் எந்தப் புல்லின் அடியே ஒளித்து வைத்திருக்கிறது என்று பார்க்க நேரமில்லை.


பட்டப் பகலில்

ஓடையின் அலையின் மேல்

 புரளும் ஒளி

இரவு மீன்கள் போல அழகு தான். என்ன செய்ய

நின்று பார்க்க நேரமில்லை.


அழகின் கடைக்கண் பார்வை வீச்சில்

கவனம் போக

அவள் பாதம் கண்டு

நடனம் காண

நேரமில்லை.


அவள் விழியோரம் அரும்பிய முறுவல் இதழ் வரை பரவிப் பொங்கும் அழகை 

காத்திருந்து காண நேரமில்லை.


இதற்கெல்லாம் நேரமில்லை

எப்படியோ வாழ்கிறாய் 

எதிலேயோ கவனத்துடன் கழியும்

உன் பாவப்பட்ட வாழ்க்கையை!


W.H. Davies கவிதை சொல்லும் பொருள் ஓரளவு இப்படித்தான்.

நாம் வாழ்வதும் பெருமளவு அப்படித் தான்.



Comments

Post a Comment

Your feedback

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...