ஜூன் 6 1882
துணிகளை மடிக்க உதவும் மின்சார சலவைப் பெட்டி (அயன் பாக்ஸ்) தயாரிக்க நியூயார்க்கை சேர்ந்த ஹென்றி டபிள்யு சீலி என்பவர் காப்புரிமம் பெற்றார்.
ஜூன் 6 1948
சினிமாவை கண்டுபிடித்த லூமியர்ஸ் சகோதரர்களில் ஒருவரான லூயிஸ் ஜீனியர் பிரான்சில் பென்டால் என்னும் இடத்தில் காலமானார்.
ஜூன் 6,1984
அமிர்தசரஸ் பொற்கோவிலில் பதுங்கிக் கொண்டிருந்த தீவிரவாதிகளை வெளியேற்ற ராணுவம் பொற்கோவிலுக்குள் நுழைந்தது.
இதற்கு ப்ளூ ஸ்டார் நடவடிக்கை என்று பெயரிடப்பட்டிருந்தது.
பஞ்சாப் தனிநாடு கோரிய காலிஸ்தான் தீவிரவாதிகளை கூண்டோடு அழித்த ராணுவ நடவடிக்கைதான் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்.
பிரதமராக இருந்த இந்திரா காந்தி, பஞ்சாப் பொற்கோவிலுக்குள் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை அழிக்க மேற்கொண்டதுதான் இந்த ராணுவ நடவடிக்கை.
இந்த நடவடிக்கையின் விளைவாக 4 மாதங்களில் தன்னுடைய சீக்கிய பாதுகாவலர்களால் இந்திரா காந்தி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் சீக்கியர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. இதில் 3,000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
ஜூன் 6,1985
பிரபல சிறுகதை எழுத்தாளர் மௌனி காலமானார். இவரது இயற்பெயர் எஸ் மணி.
ஜூன் 6, 2004:
இந்திய பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் தமிழ் செம்மொழி என அன்றைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அறிவித்தார்.

Comments
Post a Comment
Your feedback