ஜூன் 30, 1861
இங்கிலாந்தின் புகழ் பெற்ற பெண் கவிஞர் எலிசபெத் பாரட் பிரவுனிங் காச நோயால் காலமானார்.
ஜூன் 30, 1908
இன்று தான் முதல்முதலாக மைக்(Microphone), ஸ்பீக்கர் (Loud speaker), ஆம்பிளிபையர் (Amplifier) இவற்றைப் பயன்படுத்தி AT&T நிறுவனம் அமெரிக்காவில் மேடிசன் சதுக்கப் பூங்காவில் ஒலிபெருக்கி வாயிலாக ஒரு கூட்டத்தை நடத்தி வியக்க வைத்தது.
இப்போதெல்லாம் சிறிய கூட்டத்தில் பேசக்கூட நாம் ஒலிபெருக்கியைப் பயன்படுத்துகிறோம்.
ஜூன் 30, 1917
தாதாபாய் நௌரோஜி மறைந்த நாள்.
தாதாபாய் நௌரோஜி, ஆலன் ஆக்டவியன் ஹியூம் மற்றும் உமேஷ் சந்திர பானர்ஜியுடன் சேர்ந்து, இந்திய தேசிய காங்கிரஸை 1885 ஆம் ஆண்டு உருவாக்கியவர்.
மக்களோடு ஒட்டாமல் இருந்த காங்கிரஸ் பேரியக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றியவர் பால கங்காதர திலகர். திலகர் தன்னுடைய வழிகாட்டி , தாதாபாய் நௌரோஜி தான் என்று குறிப்பிட்டார்.
ஜூன் 30, 1945
தஞ்சைப் பெருவுடையான், பேரிசை, இசையியல் முதலான நூல்களை எழுதிய சங்கீத கலாநிதி தஞ்சை க.பொன்னையா பிள்ளை காலமானார்.
ஜூன் 30, 1948
புராணக் கதைகளுக்கு புது வடிவம் தந்து, புதிய விளக்கம் தந்த புதுமைப்பித்தன் காலமானார். அவரது இயற்பெயர் விருத்தாச்சலம். அவர் இறக்கும்போது வயது 42.
ஜூன் 30, 1975
தொழிலாளியாகப் பணியாற்றி பின்னர் புகழ்பெற்ற எழுத்தாளராக உயர்ந்த சிறுகதைச் சிற்பி விந்தன் காலமானார்.
ஜூன் 30, 1977
எம்.ஜி.ராமச்சந்திரன் தலைமையிலான அண்ணா திமுக அமைச்சரவை பதவியேற்றது.

Comments
Post a Comment
Your feedback