ஜூலை 1, 1646
கணிதம் மற்றும் இயற்பியல் கண்டுபிடிப்புகளில் பெயர் பெற்ற லீபினிட்ஸ் ஜெர்மனியில் இன்று தான் பிறந்தார். வகை நுண்கணிதம் மற்றும் தொகை நுண்கணிதம் குறித்த இவர் கண்டுபிடிப்புகள் தான் இன்றைய பல அறிவியல் துறைகளின் அடிப்படியாக விளங்குகின்றன.
ஜூலை 1, 1881
முதன் முதலாக தொலைபேசியில் பன்னாட்டு அழைப்பு வெற்றிகரமாக பேசப்பட்டது.
ஜூலை 1, 1843
சூப்பர் பாஸ்பேட் என்னும் செயற்கை உரம் தயாரிக்கப்பட்டு இன்று முதல் விற்பனைக்கு வந்தது. ஜான் பென்னட் லாஸ் என்பவரால் லண்டனில் இது முதன்முதலாக தயாரிக்கப்பட்டது.
ஜூலை 1, 1856
தென்னிந்தியாவின் முதல் ரயில் வியாசர்பாடிக்கும் வாலாஜா ரோட்டிக்கும் இடையே இன்று ஓடியது
ஜூலை 1, 1856
இந்தியாவில் முதன்முதலாக அஞ்சல் அட்டை (போஸ்ட் கார்டு) வெளியிடப்பட்டது. இதன் விலை காலணா. அதாவது மூன்று தம்பிடிகள் ( ஒன்றரை பைசா).
ஜூலை 1, 1891
தமிழ் நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார் சுகுணவிலாச சபையை இன்று நிறுவினார்
ஜூலை 1, 1906
இராவண காவியம் உள்ளிட்ட நூல்களை எழுதிய புலவர் குழந்தை இன்று பிறந்தார்.
ஜூலை 1, 1929
பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவரான ஏ. எம். ராஜா பிறந்த நாள்.
1950 களில் இருந்து 1970கள் வரை தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் பல பாடல்களைப் பாடியுள்ளார். அவர் பல படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார்.
இவரது மனைவி பிரபல பாடகி ஜிக்கி.
வாராயோ வெண்ணிலாவே
கேளாயோ எங்கள் கதையே...
தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா? காதல் கண்கள் உறங்கிடுமா?...
ஆடாத மனமும் ஆடுதே
ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம்
வா வா நாம் காணலாம்....
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்...
பிருந்தாவனமும் நந்தகுமாரனும்
யாவருக்கும் பொது செல்வமன்றோ
ஏனோ ராதா இந்த பொறாமை
யார்தான் அழகால் மயங்காதவரோ ...
மாசிலா உண்மைக் காதலே…
மாறுமோ செல்வம் வந்த போதிலே…
காலையும் நீயே மாலையும் நீயே
காற்றும் நீயே கடலும் நீயே...
போன்ற இவர் பாடிய பல பாடல்கள் அமரத்துவம் வாய்ந்தவை.
ஜூலை 1, 1955
இம்பீரியல் பேங்க் ஆஃப் இந்தியா நாட்டுடைமையாக்கப்பட்டு இன்று அதன் பெயர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என்று மாற்றப்பட்டது
ஜூலை 1, 1961
ஆல்பர்ட் ஐன்ஸ்டின் இன்று தனது சார்பியல் கோட்பாட்டை (Special theory of relativity) வெளியிட்டார்.
ஜூலை 1, 1964
Industrial Development Bank of India நிறுவப்பட்டது.
ஜூலை 1, 1979
சோனி நிறுவனத்தால் வாக்மேன் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜூலை 1, 2007
முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மறைந்த நாள். சுமார் ஏழு மாத காலம் பிரதமராக இருந்தார் இவர்.
ஜூலை 1, 2017
சரக்கு மற்றும் சேவை வரி இன்று முதல் அமலுக்கு வந்தது. இது பொருளாதாரத்தில் ஒரு முக்கிய சீர்திருத்த நடவடிக்கை எனக் குறிப்பிடப்படுகிறது.
Comments
Post a Comment
Your feedback