நம்மைப் போலத் தான் ஒவ்வொரு உயிரும் என்று படித்ததெல்லாம் மனதில் இருக்கிறது.
கொல்லான் புலால் மறுத்தானை கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்
என்ற குறள் கூட மனப்பாடம் தான்.
தன்னுயிர் போவதாயினும், தான் பிறிதோர் இனிய உயிரை நீக்கும் தொழிலைச் செய்தல் கூடாது.
எனவே இனி எந்த உயிரையும் கொன்று தின்னக்கூடாது என முடிவு செய்தால் சில நாட்களில் மீண்டும் கொன்று தின்று விடுகிறோம்.
ஒவ்வொரு Sunday வரும் போதும் நம் சங்கல்பம் எல்லாம் காற்றோடு போய்விடுகிறது.
நாம் தான் இப்படி என்றால் சித்தர்களுக்கும் இந்த சிக்கல் இருந்திருக்கிறது.
கொன்று தின்னக்கூடாது என முடிவு செய்த பின்னும் மீண்டும் கொன்று தின்று விடுகிற பாவத்துக்கு வருந்தி பட்டினத்தார் பாடிய பாடல் இது.
கொன்றேன் அனேகம் உயிரையெலாம் பின்புகொன்றுகொன்று
தின்றேன் அதன்றியும் தீங்குசெய்தேனது தீர்க வென்றே
நின்றேனின் சன்னிதிக்கேஅத னாற்குற்றம் நீபொறுப்பாய்
என்றேஉனைநம்பினேன் இறைவாகச்சி ஏகம்பனே.
சீர் பிரித்த பின்:
கொன்றேன் அனேகம் உயிரை எல்லாம் பின்பு கொன்று கொன்று
தின்றேன் அது அன்றியும் தீங்கு செய்தேன் அது தீர்க என்றே
நின்றேன் நின் சன்னிதிக்கே அதனால் குற்றம் நீ பொறுப்பாய்
என்றே உனை நம்பினேன் இறைவா கச்சி ஏகம்பனே.
Comments
Post a Comment
Your feedback