ஜூன் 4,1789:
அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் இன்று நடைமுறைக்கு வந்தது.
ஜூன் 4,1925:
வ. வே சுப்பிரமணிய ஐயர் நினைவு தினம்
ஏப்ரல் 2, 1881ல் திருச்சிராப்பள்ளியில் பிறந்த அவர் கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருத, தமிழ் மொழிகளில் ஆழ்ந்த புலமை பெற்றவராய் விளங்கினார்.
தர்மாலயம் என்ற இல்லம் அமைத்து சுதந்திரப்போருக்கு வீரர்களைத் தயாரிக்கும் விதமாக அவர்களுக்குக் குத்துச்சண்டை, குஸ்தி, சிலம்பம், துப்பாக்கிச் சுடுதல் போன்ற பயிற்சிகளை வ.வே.சு. கற்பித்தார்.
வ.வே.சு. தமது கொரில்லாப் புரட்சி முறைகளுடன், துப்பாக்கி சுடும் பயிற்சியை விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு அளித்தார்.
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
குளத்தங்கரை அரசமரம் என்கின்ற சிறுகதையை வெளியிட்டார். இதுவே முதன்முதலில் வெளிவந்த தமிழ் சிறுகதையாகும்.
இவரது மங்கையர்க்கரசியின் காதல் என்ற புத்தகம் தமிழில் வெளிவந்த முதலாவது சிறுகதைத் தொகுப்பாகும்.
கம்ப நிலையம் என்ற நூல் விற்பனையகத்தைத் தொடங்கி ஏராளமான நூல்களை வெளியிட்டார். ஜூன் 4, 1925ல் மறைந்தார்.
ஜூன் 4,1927:
காற்று அடித்த டயர் பொருத்தப்பட்ட மாடி பஸ் இன்று லண்டன் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜூன் 4,1937:
உலகின் முதல் ஷாப்பிங் கார்ட் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜூன் 4,1946
பின்னணிப் பாடகராக எல்லோருடைய மனதிலும் இடம்பிடித்த எஸ். பி. பாலசுப்பிரமணியம் பிறந்த நாள்.


Comments
Post a Comment
Your feedback