ஜூன் 18, 1658
அவுரங்கசீப்பின் மகன் முஹம்மது சக்கரவர்த்தி ஷாஜகானுக்கு தன் தந்தையிடமிருந்து ஏதோ செய்தி கொண்டு வந்திருப்பதாகச் சொல்லிக்கொண்டு ஒரு சில வீரர்களுடன் ஆக்ரா கோட்டைக்குள் நுழைந்தான்.
நுழைந்த அவன் தன் தாத்தாவான ஷாஜகானின் பாதுகாவலர்களைக் கொன்றுவிட்டு ஷாஜகானைச் சிறைப்பிடித்தான்.
ஜூன் 18, 1815
வரலாற்றுச் சிறப்புமிக்க வாட்டர் லூ போர் நடந்த நாள்.
இந்தப் போரில் நெப்போலியன் படை பிரிட்டன், ஜெர்மனி, ரஷ்யப் படைகளினால் முறியடிக்கப்பட்டது.
நெப்போலியன் சிறைப்பிடிக்கப்பட்டு செயிண்ட் ஹெலினா தீவிற்கு நாடு கடத்தப்பட்டார்.
வரலாற்றில் மார்ச் 30ஆம் தேதி நெப்போலியன் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து இன்று ஹெலினா தீவிற்கு நாடு கடத்தப்பட்டது வரை உள்ள காலகட்டம் 100 நாட்கள் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.
நெப்போலியனைத் தோற்கடித்த வெலிங்டன் பிரபுக்கு மன்னரால் பீட்சா எஸ்டேட் குத்தகைக்குக் கொடுக்கப்பட்டது.
இதற்கான வாடகை ஒவ்வொரு ஆண்டும் வாட்டர்லூ தினமான இன்று அப்போதைய வெலிங்டன் பிரபுவால் மன்னருக்குக் கொடுக்கப்படும்.
இதன் வாடகை ஒரு மூவண்ணக் கொடி. இந்தக் கொடியை வெலிங்டன் பிரபு, வின்ஸ்டர் மாளிகையில் உள்ள வாட்டர் லூ கூடத்தில் ஒரு விருந்து வைத்து மன்னரிடம் கொடுப்பார்.
ஜூன் 18, 1858
ஜான்சி ராணி வீர மரணம் அடைந்த நாள்.
ஒரு துரோகியின் உதவியுடன் ஜான்சி கோட்டையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய போது மாறு வேடத்தில் அங்கிருந்து தப்பிச் சென்று குவாலியர் கோட்டையை கைப்பற்றிக் கொண்டார் ஜான்சி ராணிலட்சுமி பாய்.
அக்கோட்டையை ஹியுரோன் எனும் தளபதியின் தலைமையில் வந்த ஆங்கிலேயர் படை சூழ்ந்து கொள்ள பெரும் போர் நடந்தது. அப்போரில் முதுகில் பாய்ந்த குண்டடி காயத்துடன் எதிரிகளை வெட்டி சாய்த்து முன்னேறிச் சென்று கொண்டிருக்கின்ற பொழுது அவளது குதிரை ஒரு கால்வாயை கடக்க முடியாமல் சற்று மிரண்டு நின்றது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு எதிரிகள் அவர்களை நாலாபுறமும் சூழ்ந்து கொண்டு வெட்டி வீழ்த்தினர். பின்னர் அங்கு வந்த அவளது புரட்சி வீரர்கள் படுகாயம் அடைந்து விழுந்து கிடந்த ராணியை ஒரு பாதுகாப்பான இடத்துக்கு எடுத்துக் கொண்டு செல்லும்போது அவளது உயிர் பிரிந்தது.
ஜூன் 18, 1908
இப்படியெல்லாம் கூட தலைவர்கள் நம் நாட்டில் இருந்திருக்கிறார்களா என்று வியக்க வைத்த சில தலைவர்கள் இந்த பூமியில் பிறந்திருக்கிறார்கள். வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். அவர்களின் அப்பழுக்கற்ற நேர்மையும் எளிமையும் நம்மை நெகிழ வைக்கும். அப்படிப்பட்ட தலைவர்களுள் ஒருவரான தியாகி கக்கன் பிறந்த நாள் இன்று.
ஜூன் 18, 1936
தாய் முதலான நாவல்கள் மூலம் பெரும் புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கி மாஸ்கோவில் காலமானார்.
ஜூன் 18, 1954
அடையாறு புற்றுநோய் மையத்தை இன்று டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
ஜூன் 18, 1977
கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் பல ஆண்டுகள் புலவராக இருந்தவரான பள்ளியகரம் நீ. கந்தசாமி பிள்ளை மறைந்த நாள்.
தஞ்சையின் அருகே உள்ள பள்ளியகரம் (பள்ளியக்கிரகாரம்) என்னும் ஊரில் பிறந்த இவர் ஆங்கிலம், பிரெஞ்சு , இலத்தீன், சமஸ்க்ருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தவர்.
ஜூன் 18, 1980
பிறந்த நாளும் மறைந்த நாளும் ஒரே நாளாக அமைந்த வெகு சிலருள் இவரும் ஒருவர். அண்ணாமலை என்பது அவர் பெயர். ஆனால் சின்ன அண்ணாமலை என்றே புகழ் பெற்றவர் இவர்.
இந்திய விடுதலைப் போரில் பங்கு பெற்ற வீரர் இவர். 1944 ஆம் ஆண்டில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளைக்கு பண முடிப்பு வழங்க ஒரு விழா நடந்தது. அவ்விழாவில் கலந்துகொண்ட ராஜாஜி இவரை "சின்ன அண்ணாமலை" என்று அழைத்தார். அதுவே அவரது பெயராக நிலைத்து விட்டது.
இலக்கிய வாதியாகவும், பேச்சாளராகவும், பதிப்பாளராகவும் விளங்கிய இவர் சில படங்களைத் தயாரித்தும் இருக்கிறார். சிவாஜி கணேசன் பாத்திரத்துக்கு தக்கவாறு நடக்கும் நடை அழகைப் பார்த்து வியந்து இவர் சொன்ன வாக்கியமான " சிவாஜி ஒரு நடை ஷாப்பே (Shop) வைத்திருக்கிறார்" இன்றும் திரையுலகில் பேசப்படும் வாக்கியமாக விளங்குகிறது.
ஜூன் 18 , 1920 - ஆண்டு இதே நாளில் பிறந்து ஜூன் 18 , 1980 ஆம் ஆண்டு மறைந்தவர்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் தடகளப் பிரிவில் தங்கம் வென்ற சுதந்திர இந்தியாவின் முதல் தடகள வீரரான மில்கா சிங் மறைந்த நாள்.
கோவிட் கொள்ளை கொண்ட முக்கியமான ஆளுமைகளுள் இவரும் ஒருவர்.
இவருடைய வாழ்க்கை வரலாறு 'ரேஸ் ஆஃப் மை லைஃப்' என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது.

Comments
Post a Comment
Your feedback