"O lyric Love" என்பது எலிசபெத் பிரவுனிங் 1861 ல் எழுதிய ஒரு கவிதை.
அவளை நினைக்க அதிசயமாக இருக்கிறது.
அவள் பெண்ணா?
அல்லது தேவதையா ,
அழகிய பறவையா?
O Lyric Love, half angel and half bird,
And all a wonder and a wild desire,
திருவள்ளுவர் ஒரு பெண்ணைப் பற்றிச் சொல்லியிருப்பார்.
அது பிரவுனிங் சொன்னது போலவே இருப்பதை அறியலாம்.
அந்தக் குறள் இது தான்.
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.
(திருக்குறள்)
நான் பார்த்த பெண் உண்மையில் பெண் தானா?
ஏனெனில் இவளை நினைத்தால் இவள் தெய்வப்பெண்ணோ என்று தோன்றுகிறது.
அல்லது இவள் கொஞ்சும் அழகு மயிலோ?
அல்லது கனல் போன்ற பொலிவு கொண்ட இளந்தளிரோ?
இப்படிப்பட்ட அழகிய பெண்ணை நினைத்து என்னுடைய நெஞ்சம் மயக்கத்தில் உள்ளது.
திருவள்ளுவர் காலம் என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்.
பிரவுனிங் காலம் வெறும் 150-160 ஆண்டுகளுக்கு முன் தான்.
எனவே திருக்குறளில் சொன்னது போலவே பிரவுனிங் கவிதையும் சொல்கிறது என்று சொல்வது தானே சரியாக இருக்கும்.
Comments
Post a Comment
Your feedback