ஜூன் 7, 1826
ஒளியின் அலைநீளத்தை அளக்க டிஃப்ராக்சன் கிரேட்டிங் என்னும் ஒளிக்கதிர் சிதைவு முறையை பயன்படுத்திய இயற்பியல் விஞ்ஞானிகளில் ஒருவரான ஜோசப் ஹூப்பர் இன்று காலமானார்.
ஜூன் 7,1898
மந்த வாயுக்களில் ஒன்றான நியான் டபிள்யு ராம்சே என்பவராலும் எம் டிராவர்ஸ் என்பவராலும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஜூன் 7,1985
சிறுகதை ஆசிரியர் மௌனி மறைந்த நாள்.
மணிக்கொடி பத்திரிக்கையும் குறிப்பாக பிஎஸ் ராமையாவும் தான் எஸ்.மணி என்று சுகவாசியாக இருந்த சிறுநகர இளைஞன் மௌனி என்ற எழுத்தாளராக மாறக் காரணம்.
அவர் எழுதிய எல்லா சிறுகதைகளையும் படிக்க வெறும் இரண்டு மணி நேரம் போதும். இவ்வளவு குறைந்த படைப்புகளைத் தந்த போதும், 20ஆம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய வரலாறு எழுதும் எல்லாத் தமிழ் பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் தவறாமல் மௌனியைக் குறிப்பிடுகிறார்கள்.
அது தான் அவர் எழுத்தின் வலிமை.
மௌனி ஒன்றும் பண்டிதர் போன்று தமிழ் படித்தவர் அல்ல. அவர் படித்தது கணக்கு மட்டும் தான்.
அவர் அறிந்த அன்றாட வாழ்க்கைத் தமிழ் தான் அவருடைய இலக்கியத் தமிழும்.
அன்றாட மொழி நடைக்கு விசேஷ பரிமாணங்களை அளித்து எழுதியது தான் மௌனி எழுத்தின் சிறப்பம்சம்.
ஜூன் 7: உலக உணவுப் பாதுகாப்பு நாள்

Comments
Post a Comment
Your feedback