ஜூன் 21,1808
இன்று Boron (போரான்) தனிமம் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கே.லூசாக்கும் தெனாட் என்பவரும் இதை அறிவித்தனர்.
இதே தனிமத்தை டேவி என்பவர் தானும் கண்டுபிடித்ததாக ஜூன் 30ம் தேதி அறிவித்தார்.
10 நாட்கள் இடைவெளிக்குள் பல வேதியியல் விஞ்ஞானிகள் தனித்தனியே இத் தனிமத்தைக் கண்டுபிடித்ததாக அறிவித்தது வேதியியல் தனிம வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும்.
ஜூன் 21, 1852
கிண்டர் கார்டன் கல்வி முறையை நிறுவிய பிரெஞ்ச் கல்வியாளர் பிரெடரிக் வில்ஹெல்ம் ஆகஸ்ட் ப்ரோபெல் ஜெர்மனியில் காலமானார்.
ஜூன் 21, 1857
ஹைட்ரஜன் பெராக்ஸைடு, கோபால்ட் ப்ளூ ஆகியவற்றைக் கண்டுபிடித்தவரும் போரான் தனிமத்தை கண்டுபிடித்தவர்களுள் ஒருவருமான லூயிஸ் ஜாகொஸ் தெனார்ட் காலமானார்.
ஜூன் 21, 1940
ஆர். எஸ். எஸ். அதாவது ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் நிறுவனர்
கேசவ பலிராம் ஹெட்கேவர் மறைந்த தினம்.
ஜூன் 21, 1948
இந்தியாவின் கடைசி பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் பதவி விலகினார்.
ஜூன் 21, 1948
இன்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜி பதவியேற்றார்.
1917 ஆம் ஆண்டு சேலம் நகர சபைத் தலைவராக ஆரம்பித்த அவரது நிர்வாகப் பணியின் உச்சகட்டமாக இதைச் சொல்லலாம்.
ஜூன் 21, 1980
சுதந்திரப் போராட்ட வீரர் சின்ன அண்ணாமலை காலமானார்.
இவரது தலைக்கு பிரிட்டீஷ் அரசு பத்தாயிரம் ரூபாய் விலை வைத்திருந்தது.
ஜூன் 21, 1991
நேற்று காங்கிரஸ் பாராளுமன்ற கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட நரசிம்மராவ் இன்று பிரதமராக பதவியேற்றார்.
ஜூன் 21, 1994
ஆகாய கங்கை (Milky way Galaxy) சுருள் வடிவான அமைப்பில் தான் உள்ளது என்பதை முதன்முதலில் விளக்கிக்காட்டிய அமெரிக்க வானியலாளர் வில்சன் மார்க்கோன் இன்று காலமானார்.
ஜூன் 21, 2001
இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன் மறைந்த நாள் நாள்.
சிவாஜியின் வசந்தமாளிகை,
தில்லானா மோகனாம்பாள்,
எம்.ஜி. ஆரின் அடிமைப்பெண்,
நல்லநேரம் மற்றும் திரை இசையில் வேறொரு பரிமாணத்தைக் காட்டிய சங்கராபரணம் போன்ற பல படங்களின் இசையமைப்பாளர் இவர்.
காலத்தால் அழியாத எஸ்.பி.பி.யின் ஆயிரம் நிலவே வா என்ற பாடலை எம்.ஜி.ஆருக்காக அடிமைப்பெண்ணில் உருவாக்கியவரும் இவரே.
1988 ஆம் ஆண்டு வெளிவந்த “பாய்மரக்கப்பல்” படத்தில் எஸ்.பி.பி. இவரின் இசையில் பாடிய "ஈரத் தாமரைப் பூவே.." ஒரு அருமையான மெலடி.
கே. வி. மகாதேவன் பாடல்களை இன்று கேட்டாலும் கர்நாடக சங்கீதத்தை இத்தனை எளிமைப்படுத்த முடியுமா என்று வியப்பாக இருக்கும்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இவர் தமிழில் மட்டும் 218 தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
1942 இல் மனோன்மணி என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்த இவர் 1990 வரை திரையுலகில், இசையுலகில் புகழோடு விளங்கினார்.
ஜூன் 21 : International Yoga Day


Comments
Post a Comment
Your feedback