நமக்கு உதவி செய்பவர் போல நடித்துக் கொண்டு கூடவே இருந்துகொண்டு நம் வேலைகள் நல்லபடி நடக்காமல் கெடுப்பவர்கள் இருக்கிறார்கள்.
அதே நேரத்தில், பார்ப்பதற்கு வில்லங்கமானவர் போலத் தோன்றும் ஒருவர் கஷ்டமான நேரத்தில் நமக்கு உதவி செய்து ஆறுதலாக இருப்பதும் உண்டு.
இந்த இருவரும் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இருப்பார்கள்.
அவரவர் தன்மைக்கு ஏற்றவாறு நடந்துகொண்டு நாம் நம் செயலை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்.
கொதிக்கும் நீர் ஒரு புறம்.
குளிர்ந்த நீர் ஒருபுறம்.
இந்த இரண்டில் ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும் என முயற்சிக்கக்கூடாது.
அது அல்ல வாழ்க்கை.
கொதிக்கிற நீருக்குள் தேவையான அளவு குளிர்ந்த நீரை ஊற்றி அளவான பதமான இளஞ்சூட்டை அனுபவிக்க பழகிக் கொள்வது தான் வாழ்க்கை.
அதைத் தான் சமயோசிதம் என்று சொல்வார்கள்.
எவ்வளவு எதார்த்தமான தீர்வு இது!
செந்நீரார் போன்று சிதைய மதிப்பார்க்கும்
பொய்ந்நீரார் போன்று பொருளை முடிப்பார்க்கும்
அந்நீர் அவரவர்க்குத் தக்காங் கொழுகுபவே
வெந்நீரின் தண்ணீர் தெளித்து.
( முன்றுறை அரையனார்- பழமொழி 90)
Comments
Post a Comment
Your feedback