ஜூன் 16,1893 -
மதுரை தியாகராஜர் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் குழுமங்களின் நிறுவனர் கருமுத்து தியாகராச செட்டியார் பிறந்த நாள்.
தமிழ் மீது தணியாத ஆர்வம் கொண்டிருந்த இவர் தமிழ் சான்றோர்களையும், புலவர்களையும் ஆதரித்து வந்தவர். பண்டித மணி, பேராசிரியர் இரத்தினசபாபதி போன்ற பெருமக்களால் தொடங்கப்பட்ட நூல் நிலையங்கள் நடத்தமுடியாத நிலைக்குச் சென்ற பொது அவற்றை விலைகொடுத்து வாங்கி தொடர்ந்து நடத்தி வந்தவர்.
ஜூன் 16,1911
ஐ.பி.எம் நிறுவனம் இன்று தான் நியூயார்க்கில் ஆரம்பிக்கப்பட்டது.
16 சூன் 1924 -
பிரபல திரைப்பட நடிகரும் பாடகருமான டி. ஆர். மகாலிங்கம் பிறந்த நாள்.
ஜூன் 16, 1925
இந்திய விடுதலை இயக்க வீரர் தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் டார்ஜிலிங்கில் இன்று காலமானார்.
ஜூன் 16, 1938
சென்னை வானொலி நிலையத்தை ராஜாஜி இன்று துவக்கி வைத்தார்.
ஜூன் 16, 1963
வாலன்டைனா தெரஸ்கோவா என்னும் 26 வயது பெண்ணை மாலுமியாகக் கொண்ட வோஸ்டக்- 6 என்னும் விண்வெளி ஊர்தி ரஷ்யாவினால் செலுத்தப்பட்டது.
விண்வெளிக்குச் சென்ற முதல் வீராங்கனையான இவர் 71 மணி நேரம் விண்ணிலிருந்து, பூமியை 48 முறை சுற்றி வந்தார்.
ஜூன் 16, 1971
BBC-பி.பி.சி யை உருவாக்கிய ஜான் சார்லஸ் ரீட் எடின்பர்கில் காலமானார்.
ஜூன் 16, 1993
இந்தியாவின் முதல் தலைமைத் தளபதி பீல்டு மார்ஷல் சி.எம்.கரியப்பா பெங்களூரில் காலமானார். அவருக்கு வயது 93.
ஜூன் 16, 2010
பூட்டான் புகையிலைப் பயன்பாட்டை முற்றாகத் தடை செய்த முதலாவது நாடானது.

Comments
Post a Comment
Your feedback