ஜூன் 29, 1893
இந்திய அறிவியல் அறிஞர் பிரசண்ட சந்திரா (Prasanta Chandra Mahalanobis) கல்கத்தாவில் இன்று பிறந்தார்.
ஜூன் 29, 1925
நாடகம் என்றாலே மறக்க முடியாத பெயர்களுள் ஒன்று ஆர். எஸ். மனோகர் என்ற பெயர். இன்று தான் அவர் பிறந்தார். நாடக நடிகராக பெரும் புகழ் பெற்ற இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
ஜூன் 29, 1943
"நீங்கள் உங்கள் ரத்தத்தைத் தாருங்கள். உங்களுக்கு நான் விடுதலை வாங்கித் தருகிறேன்" என்னும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் புகழ்பெற்ற சொற்பொழிவை டோக்கியோ வானொலி நிலையம் இன்று ஒலிபரப்பியது.
ஜூன் 29, 1966
இந்திய விஞ்ஞானி, கணித வல்லுநர், சம்ஸ்கிருத மேதை, வரலாற்று ஆசிரியர் என்ற பன்முகப் பரிமாணம் கொண்ட தாமோதர் தர்மனண்ட் கோசாம்பி (Damodar Dharmanand Kosambi) இன்று மறைந்தார்.
ஜூன் 29, 2009
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரான
வ. ஐ. சுப்பிரமணியம் மறைந்த நாள்.
ஜூன் 29, 2017
பக்திப் பாடல்களின் வழியாக பல கோடி மக்களின் இதயம் தொட்ட சூலமங்கலம் சகோதரிகள் என அழைக்கப்படும் ஜெயலட்சுமி, ராஜலட்சுமி ஆகிய இருவருள் ஒருவரான சூலமங்கலம் ஜெயலட்சுமி மறைந்த நாள்.

Comments
Post a Comment
Your feedback