ஜூன் 27, 1774
மாங்கனிஸ் என்னும் உலோகம் அதன் தாதுவில் இருந்து சி.ஜலி என்பவரால் தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டது
ஜூன் 27, 1887
சிங்கைநேசன் என்னும் தமிழ் வார இதழ் சிங்கப்பூரிலிருந்து வெளிவர ஆரம்பித்தது.
ஜூன் 27, 1880
இதே நாளில் தான் அமெரிக்காவின் டஸ்கும்பியா நகரில் ஹெலன் கெல்லர் பிறந்தார்.
எல்லாக் குழந்தைகளையும்போல இயல்பாக வளர்ந்துகொண்டிருந்த ஹெலன் 18-ம் மாதத்தில் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். பிறகு பேசும், பார்க்கும் மற்றும் கேட்கும் திறன்களை இழந்தார். இருந்தாலும் மனம் தளராமல் பொருள்களைத் தடவி, முகர்ந்து பார்த்து அடையாளம் காணமுயன்றார் ஹெலன்.
ஹெலனுக்கு ஏழு வயதாக இருக்கும்போது அவரின் பெற்றோர் அலெக்ஸாண்டர் கிரஹம்பெல்லைச் சந்தித்தனர். கிரஹம்பெல்லின் ஆலோசனைப்படி ஹெலனின் பெற்றோர், பாஸ்டனில் இயங்கிவரும் பெர்க்கின்ஸ் நிறுவனத்துக்குக் கடிதம் எழுதினர். பெர்க்கின்ஸ் நிறுவனம் ஹெலனின் வாழ்க்கையை மலரச் செய்யும் வகையில் ஒரு பெண்ணை அனுப்பி வைத்தது. அவர்தான் ஆன் சல்லிவன்.
சல்லிவனின் அன்பும் அக்கறையும் ஹெலனுக்கு தொடர்ந்து 48 ஆண்டுகளுக்குக் கிடைத்தது.
ப்ரெய்லி முறையில் ஆங்கிலம், பிரெஞ்சு, கிரேக்கம், லத்தீன் உள்ளிட்ட மொழிகளைக் கற்றார் ஹெலன்.
ஹெலனின் வாழ்வில் மிக முக்கியமானது அவர் ரேட் கிளிஃப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததுதான். கடும் போராட்டங்களுக்குப் பிறகே அவருக்கு அனுமதி கிடைத்தது. அங்குதான் அவர் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார். பார்வை, கேட்கும் மற்றும் பேசும் திறனற்ற ஒருவர் இளங்கலை முடித்தது அதுவே முதன்முறை. தனது 24 வயதில் முதுகலைப் பட்டமும் பெற்று வியப்பிலாழ்த்தினார்.
படிக்கும்போதே தி ஸ்டோரி ஆஃப் மை லைப் (the story of my life) எனத் தன் சுயசரிதையை எழுதினார். அந்தப் புத்தகம் இதுவரை 50-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
தனது குறைகளைப் பற்றி சிறிதும் கவலைபடாமல் உலகை வலம் வந்த ஹெலனை பக்கவாதம் வீட்டிலேயே முடக்கியது. 1968 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நாள் இவ்வுலகை விட்டு மறைந்தார்.
ஜூன் 27, 1902
இந்தியாவில் காந்தியடிகளைப் பற்றி முதன்முதலாக சுதேசமித்திரன் நாளிதழ் செய்தி வெளியிட்டது.
ஜூன் 27, 1922
எழுத்தாளர் அகிலன் பிறந்த நாள்.
இலக்கியத்திற்காக இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான ஞானபீட விருதைப்பெற்ற எழுத்தாளர் அகிலன் 27-6-1922-ம் ஆண்டு கரூரில் பிறந்தார்.
இவர் எழுதிய சித்திரப்பாவைக்கு அகில இந்திய ரீதியில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயர்ந்த விருதான ஞானபீடம் விருது கிடைத்தது.
சோழ வம்சத்தின் வரலாற்றை முழுமையாக எடுத்துக் கூறும் இவருடைய நாவலான வேங்கையின் மைந்தன் நாவல் சாகித்ய அகாடமி பரிசைப்பெற்றது. அந்த நாவல் நடிகர் திலகம் சிவாஜி கனேசனால் மேடை நாடகமாக நடிக்கப்பட்டு அந்தக் காலத்தில் பெரும் புகழ்பெற்றது.
இவர் எழுதிய கயல்விழி “கயல்விழி” சரித்திர நாவல் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் விருப்பத்தின் காரணமாக சினிமாவாக எடுக்கப்பட்டது. ப.நீலகண்டன் திரைக்கதை, வசனம் எழுத, அந்தப்படத்தை எம்.ஜி.ஆர். இயக்குநராகவும் கதாநாயனாகவும் பங்கு பெற்று
வெளி வந்து பெரிய வெற்றிப்படமாக புகழ்பெற்றது. அந்தப் படம் தான் “மதுரையைமீட்ட சுந்தரபாண்டியன்”.
உலகின் முதல் அணு மின்னுலை ரஷ்யாவில் அமைக்கப்பட்டது. அது 5000kw மின் உற்பத்தித் திறனுடையதாக இருந்தது.
ஜூன் 27, 1974
இன்று பிரதமர் இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு இந்திய அரசுக்கு சொந்தமான
கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தது.

Comments
Post a Comment
Your feedback