ஜூன் 22,1527
இத்தாலியை உருவாக்கப் பாடுபட்ட நிக்காலோ மாக்கிய வல்லி இன்று காலமானார்.
ஜூன் 22,1633
வானியல், பொறியியல், இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய அறிவியல் துறைகளில் கலிலியோ கலிலி என்ற பெயர் எப்போதும் மறக்கப்பட முடியாத ஒரு பெயர்.
இன்றைய நாள் அவர் வாழ்க்கையில் ஒரு கொடுமையான நாள். அப்படி என்ன நடந்தது?
'சூரியன் நிலையாக இருக்கிறது. பூமி தான் சூரியனைச் சுற்றி வருகிறது' என்ற அறிவியல் உண்மையை கலிலியோ கலிலி உறுதிப்படுத்தியிருந்தார். அவரது இந்தக் கருத்து 'பூமி நிலையாக உள்ளது, சூரியன் தான் பூமியைச் சுற்றி வருகிறது' என்ற மதக் கருத்துக்கு முரணாக அமைந்திருந்ததால் ரோம் கத்தோலிக்க நிர்வாகம் அவரை மதங்களுக்கு எதிரானவர் என்று குற்றம் சாட்டப்பட்டவர் என அறிவித்து விசாரணைக்கு ரோமுக்கு வர உத்தரவிட்டது.
விசாரணையில் கலிலியோவை மதத் துரோகம் செய்த குற்றவாளி எனக்கூறி சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. அவர் கூறிய கருத்து தவறு என்றும் சூரியன் தான் பூமியைச் சுற்றிவருகிறது என்பதை பொதுவெளியில் கூறவேண்டும் என்றும் சர்ச் நிர்வாகம் இன்று உத்தரவு பிறப்பித்தது.
தொடர்ந்த துன்புறுத்தல்களைப் பொறுக்கமுடியாமல் "பூமி நிலையாக உள்ளது, சூரியன் தான் பூமியைச் சுற்றி வருகிறது. பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்று தவறாகக் கூறிவிட்டேன்" என்று கலிலியோ இன்று (ஜூன்-22,1633) நொந்துபோய்க் கூறினார்.
அப்படியிருந்தும் அவர் இறக்கும் வரை வீட்டுக்காவலில் வைக்க ரோம் கத்தோலிக்க நிர்வாகம் உத்தரவிட்டது.
அதன்படி 1642ஆம் ஆண்டு இறக்கும் வரையில் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு, வீட்டுக்குள்ளேயே மரணமடைந்தார்.
கலிலியோ இறந்து 350 ஆண்டுகள் கழித்து, 'பூமி தான் சூரியனைச் சுற்றி வருகிறது' என்ற கலிலியோவின் கோட்பாடு சரியானது என்று 1992 ஆம் ஆண்டு வாடிகன் நிர்வாகம் பொதுவெளியில் அறிவித்தது.
Comments
Post a Comment
Your feedback