ஜூன் 20, 1916
பூனேவில் இந்தியாவின் முதல் மகளிர் பல்கலைக்கழகமான திருமதி நாதிபாய் தாமோதர் தாக்கர்சே இந்திய இந்திய மகளிர் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
ஜூன் 20, 1966
பிரபஞ்சம் தோன்றியது பற்றிய பிக் பேங் தியரி அதாவது பெரு வெடிப்புக் கொள்கையை உருவாக்கியவர்களில் ஒருவரான பெல்ஜியத்தை சேர்ந்த George Lemaitre ஜீயார்ஜஸ் எட்வர்ட் லேமய்ட்டேர் காலமானார்.
முதன் முதலில் இந்தக் கொள்கையை அவர் விவரித்தபோதும் Bigbang பிக்பாங் என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை.
இந்தியாவின் புகழ்பெற்ற பறவையியல் அறிஞர் சலீம் அலி பம்பாயில் காலமானார்.
ஜூன் 20, 1991
ராஜீவ் காந்திக்கு பிறகு பி.வி.நரசிம்மராவ் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் நாளை (21.6.1991) பதவி ஏற்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஜூன் 20, 2003
விக்கிமீடியா நிறுவனம் இன்று புளோரிடாவில் தொடங்கப்பட்டது.
ஜூன் 20, 2005
மின்னியல் துறையில் சிப்(Chip) என்று தற்போது வழங்கப்படும் IC யை (Integrated Circuit) முதன்முதலில் உருவாக்கியவரான Jack.S.Kilby அமெரிக்காவில் இன்று காலமானார்.
ஜூன் 20, 2006
சுரதா மறைந்த நாள்.
இராசகோபாலன் என்ற தன் பெயரை சுரதா என மாற்றிக்கொண்டவர் இவர். பாரதி மீது கொண்ட பற்றால் சுப்புரத்தினம் என்ற தன் பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டவர் பாரதிதாசன்.
பாரதிதாசன் மீது கொண்ட பற்றினால் இராசகோபாலன் என்ற தன் பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டு அதையும் சுருக்கி சுரதா என்று ஆக்கிக் கொண்டவர் இவர்.
உவமைக் கவிஞர் என்ற அடைமொழிக்குச் சொந்தக்காரர் சுரதா.


Comments
Post a Comment
Your feedback