இன்னும் திருமணம் நடக்கவில்லை.
அவளைப் பார்க்க வந்திருக்கும் அவனிடம் அவள் தோழி சொல்கிறாள்.
உங்கள் ஊரில்
எல்லாக் குறவர்களும்
தம் வீட்டு முற்றத்தில் ஆடுமாடுகள்
தங்கள் அரிப்பை போக்க
உரசிக்கொள்வதற்காக
பெரிய கல்லை
நட்டு வைத்திருப்பார்கள்.
எது சரி தவறு என்று தெரியாத
குரங்குகள், அந்தக் கல்லில் ஏறி துள்ளி விளையாடும்.
உனக்கு ஒன்று நான் சொல்ல விரும்புகிறேன்.
குளத்தில் வளரும் குவளை மலர் போன்ற கண்ணை உடையவள் இவள்.
இவளது கண்கள் உன்னை விரும்பிப் பார்த்துக்கொண்டே இருக்கும்படிச் செய்ய வேண்டும்.
அதற்கு ஒரே வழி இன்னும் தள்ளிப் போடாமல் நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
குறவர் முன்றில் மா தீண்டு துறுகல்
கல்லா மந்தி கடுவனோடு உகளும்
குன்ற நாட! நின் மொழிவல்; என்றும்,
பயப்ப நீத்தல் என் இவள்
கயத்து வளர் குவளையின் அமர்த்த கண்ணே.
(ஐங்குறுநூறு 277)
Comments
Post a Comment
Your feedback