அவனுக்கு உன் மேல் அளவில்லாத அன்பு உண்டு. ஆனாலும் பொருள் தேட வேண்டும் என்று போயிருக்கிறான்.
அவன் போகும் வழியில் வெய்யிலால் எல்லாம் காய்ந்து கிடக்கும்.
பசியால் வாடும் தன் பெண் யானைக்காக, ஆண் யானை யா மரப் பட்டையை உரித்துக் கொடுக்கும்.
அதன் அன்பு அவனை நெகிழ வைக்கும்.
அவனுக்கு உடனே உன் நினைப்பு வந்து விடும்.
எனவே பாதியிலேயே திரும்பி வந்து விடுவான்.
அதனால் எப்போது வருவான் என்று நீ கவலைப்படாதே.
விரைவில் வந்து விடுவான்.
நசைபெரி துடையர் நல்கலு நல்குவர்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழியவர் சென்ற வாறே.
(குறுந்தொகை)
Comments
Post a Comment
Your feedback