குழந்தைகளை இரண்டு வரிசையாகப் பிரித்து ஒவ்வொரு அணியிலிருந்தும் ஒருவர் என தொடர்ந்து ஏதாவது வாக்கியம் எழுத வேண்டும்.
நிகழ்கால வாக்கியங்கள் மட்டும்.
அவர்கள் சொல்லும் வாக்கியங்கள் இப்படி இருக்கும்.
A- நாய் குரைக்கிறது
B- பள்ளி மணி அடிக்கிறது
A-அப்பா ஊருக்குப் போகிறார்
B-குட்டிக்கரணம் போடுகிறேன்
A-பஜ்ஜி சாப்பிடுகிறேன்
B-பாட்டுக் கேட்கிறேன்
A அணியின் ஏதாவது ஒரு வாக்கியத்தை B அணியின் ஏதாவது ஒரு வாக்கியத்தோடு சேர்த்து இரண்டு வரியையும் ஒன்றன் பின் ஒன்றாக எழுதிக் கொள்ளவேண்டும்.
A-அப்பா ஊருக்குப் போகிறார்
B-பாட்டுக் கேட்கிறேன்
இந்த இரண்டையும் சேர்த்த பிறகு ஒரு கவிதையின் சாயல் வரும்.
அதைக் குறித்த குழந்தைகளின் விளக்கம் அழகான கற்பனைகளைக் காட்டும்.
அப்பா ஏன் ஊருக்குப் போகிறார் என்பதற்கு நிறைய கற்பனைகள் வரும்.
இரண்டையும் தொடர்புபடுத்தி சொல்லக் கேட்டால் அழகான பதில்கள் வரும்.
"அப்பா இருக்கும் போது பாட்டுக் கேட்க முடியாது. அது தான் அப்பா ஊருக்குப் புறப்பட்டவுடன் பாட்டுக் கேட்கிறேன்"
இப்படிப் பதில்கள் நம்முடைய கற்பனையை விட குழந்தைகளின் கற்பனைகள் அழகானவை என்பதைப் புரிய வைக்கும்.
முயற்சிக்கலாமே!
(ஹைகூ ஒரு புதிய அறிமுகம் - சுஜாதா)
Comments
Post a Comment
Your feedback