நீண்ட தூரம் ரயிலில் அல்லது பஸ்ஸில் தனியாகப் போக வேண்டி வரும் போது அருகில் இருப்பவரோடு ஒரு சிநேகம் வரும்.
பயணம் முடியும் வரை அவரோடு பேசிக்கொண்டு வரலாம். இப்போதெல்லாம் யாரும் யாரோடும் பேசுவதில்லை.
எல்லாம் மொபைல் போனுக்குள் மூழ்கிக் கிடப்பதால் அருகில் இருப்பவரை ஒரு மனிதராக நினைப்பதில்லை. அதுவும் ஒரு பொருள் என்ற அளவில் தான் ஓடுகிறது ஒவ்வொருவர் வாழ்க்கையும்.
ஆனால் சில ஆண்டுகள் முன்பு ரயில் அல்லது பஸ்ஸில் போவது என்பது சமூகத்தோடு உண்மையிலேயே கலந்து போவது தான். பயணத்தின் போது அருகில் அமர்ந்திருப்பவர்களோடு பேச்சைத் தொடங்குவது என்பது ஒரு கலை.
வானிலை இந்த விசயத்தில் ரொம்பவும் பயன்படும்.
"இங்கயெல்லாம் நல்ல மழை போல. ஆனால் எங்க ஊருக்குத் தான் மழையே வரமாட்டேங்குது" என ஒரு தூண்டிலை வீசிவிட்டு யார் நம்மோடு பேசுவதற்கு வருவார் எனக் காத்திருக்க வேண்டும்.
"எங்க ஊருக்கும் மழை சரியில்ல. இங்க நல்ல மழை தான் போல" என்று ஒருவர் "நான் ரெடி" என வந்து பேச்சைத் தொடங்குவார்.
ரெண்டு பேரும் எந்த ஊர் என்ற விபரங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டு பெண் பார்க்க, மாப்பிள்ளை பார்க்க விபரங்கள் வரைக்கும் சில நிமிடங்களில் அன்யோன்யம் வந்துவிடும்.
மழை தான் என்றில்லை. "இந்த வருடம் என்னமோ வெயில் இப்படி அடிக்கிறது" என்பதும் நட்புத் தூண்டில் தான்.
இப்படி ஒரு பேச்சை ஆரம்பிக்கும் கலையை ஆங்கிலத்தில்
Breaking the ice என்று சொல்லுவார்கள்.
இந்த breaking the ice வராதவர்கள் தான் "தேமே" என்று பாட்டுக் கேட்டுக்கொண்டு அல்லது ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வருவார்கள்.
Now a days, no chance for us to break any ice. If we try breaking the ice they will break the head.
Comments
Post a Comment
Your feedback