புழுதி படிந்து போன அந்தப் பாறை கவனிப்பாரற்று அது பாட்டுக்குக் கிடக்கும்.
ஒரு நல்ல மழை பெய்த பிறகு பார்த்தால் அந்தப் பாறை குளிப்பாட்டப்பட்ட யானை போல ஒரு புதுப் பொலிவுடன் இருக்கும்.
அவன் வருவதற்கு முன் நானும் புழுதி படிந்து போன அந்தப் பாறை போலத் தான் இருந்தேன்.
அவன் வந்துவிட்ட பின் பெற்ற மகிழ்ச்சியில் என் கண்களும் மழை பெய்த பாறை போலப் பொலிவுடன் இருக்கின்றன.
மாசறக் கழீஇய யானை போலப்
பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகற்
பைதல் ஒருதலைச் சேக்கும் நாடன்
நோய்தந் தனனே தோழி
பசலை ஆர்ந்தன குவளையங் கண்ணே.
(குறுந்தொகை 13)
சொல்லும் பொருளும்:
மாசு அற -புழுதி போகும்படி
கழீஇய யானை - கழுவப்பட்ட யானை
பெயல் - மழை
உழந்த - தூய்மையான
இருபிணர் -கரிய சொரசொரப்பான
துறுகல் - பாறை
பைதல் -
சேத்தல் - தங்குதல்
நாடன் - மலை நிலத் தலைவன்
ஆர்தல்-பெறுதல்
அம் - அழகு.
Comments
Post a Comment
Your feedback