நாம் நிறையப் படித்திருக்கிறோம் என்று மற்றவர்கள் தான் நம்மைப் பற்றிப் பெருமையாகச் சொல்லவேண்டும்.
நாம் சுறுசுறுப்பான தோற்றப் பொலிவுடன் இருக்கிறோம் என்று மற்றவர்கள் தான் நம்மைப் பெருமையாகச் சொல்லவேண்டும்.
நாம் பிறந்த குடியின் பெருமையும் அப்படித்தான். மற்றவர்களால் தான் பாராட்டப்படவேண்டும்.
அப்படியெல்லாம் இல்லாமல், நாமே நம்முடைய கல்விப் பெருமை, தோற்றப் பொலிவு, குடிப் பெருமை பற்றிப் பெருமையாகக் கூறிக்கொண்டால் நம்மை "மருந்தால் குணப்படுத்த முடியாத பைத்தியம்" என்றே எல்லோரும் கேவலமாக நினைப்பார்கள்.
கற்றனவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும்
பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும்; தானுரைப்பின்
மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத
பித்தனென் றெள்ளப் படும்.
(நாலடியார் 340)
.
Comments
Post a Comment
Your feedback