தமிழில் நாட்டுப்புறப் பாடல்கள் நிறைய உண்டு. அதில் பல பொருள்கள், பல சூழல்கள் உண்டு. அதைக் காட்டிலும் விஷேசம் படித்தவர்கள் மட்டும் அல்லாமல் படிக்காதவர்கள் கூடப் பாடும் அப் பாடல்களில் பல நுட்பங்கள் இருக்கும்.
இரண்டு பேர் சேர்த்து இரண்டு கருத்துக்களை இணைத்துப் பாடிக்கொண்டே போவது ஒரு சாகசம்.
பச்சைத் தவக்களை பச்சைத் தவக்களை
எத்தனை நெல்லுக்கு வாழ்க்கைப்பட்டே?
கோட்டை நெல்லுக்கு வாழ்க்கைப் பட்டேன்
கோட்டை நெல்லில் முத்திரை போட கணக்குப் பிள்ளை வேண்டுமே
கணக்குப் பிள்ளையைத் தட்டி எழுப்ப கைக்குழந்தை வேண்டுமே
கைக் குழந்தைக்குப் பால் கொடுத்த பெண் ஒருத்தி வேண்டுமே
பெண்ணொருத்திக்கு பேன் பார்க்க குரங்குக் குட்டி வேண்டுமே
குரங்குக் குட்டிக்கு வாலறுக்க சூரிக்கத்தி வேண்டுமே
சூரிக்கத்தியைச் சொருகி வைக்க பொத்தக் குடிசல் வேண்டுமே
பொத்தக் குடிசலைப் பிரித்துக்கட்ட
போத்த ராசா வேண்டுமே....
குழந்தைகள் விளையாடும் சில விளையாட்டுக்களில் இந்தப் பாடல்களின் சாயல் இருக்கும். விளையாடும் போதே நாநெகிழ் பயிற்சியும் சேர்த்து நடக்கும்.
Comments
Post a Comment
Your feedback