எந்த உயிரையும் கொல்லாமல் உன்னால் இருக்க முடியுமா?
அப்படி இருப்பது நல்லது. ஏனென்றால் கொலை தீமை தருவது.
படிப்பில் கவனம் போகாமல் இருப்பது நல்லதல்ல.
ஏனென்றால்,
படிக்காமல் இருப்பது கெடுதல் தருவது.
கோபம்?
கோபம் கெடுதல் தான் தரும்.
நல்லவர்கள், அதாவது பெரியவர்கள் ஏதோ சொல்ல முயற்சிக்கிறார்கள்.
அவர்கள் சொல்வதற்கு முன் முந்திக்கொண்டு எதையாவது சொல்லுதல் நல்லதல்ல.
ஊரில் உள்ள சொந்தக்காரர்களைப் பழித்தல் நல்லதல்ல.
வாழ்க்கை என்பது சரி தவறுகளைக் கண்டுபிடிப்பது என்பது மட்டும் அல்ல.
அதைக் கடைப்பிடிப்பதும் தான்.
கொல்லாமை நன்று கொலை தீதெழுத்தினைக்
கல்லாமை தீது கதந்தீது-நல்லார்
மொழியாமை முன்னே முழுதுங் கிளைஞர்
பழியாமை பல்லார் பதி.
(காரியாசான்- சிறுபஞ்சமூலம் 50)
Comments
Post a Comment
Your feedback