பொன்னை தட்டிச் சிதைத்தாலும் அது பொன் தான்.
கரும்பை இடித்துப் பிழிந்த பின்னும் அது கரும்பின் இனிய சுவையைத் தான் தரும்.
பாலைக் காய்ச்சி எடுத்துக் குடித்தாலும் அது இனிய பாலின் சுவையாகவே இருக்கும்.
எப்படி உருக்குலைத்த போதும் சந்தனம் சந்தனம் தான். அதன் மணம் மாறாது.
அதுபோல,
எவ்வளவு துன்புற்றாலும், நல்லோரிடத்தில் பழைய நல்ல இயல்புகளே நிலைத்திருக்கும்.
பொன்னும் கரும்பும் புகழ்பாலும் சந்தனமும்
சின்னம்பட வருத்தம் செய்தாலும் - முன்இருந்த
நற்குணமே தோன்றும், நலிந்தாலும் உத்தமர்பால்
நற்குணமே தோன்றும் நயந்து.
(நீதிவெண்பா)
Comments
Post a Comment
Your feedback