பரபரப்பான இன்றைய உலகில் வாழ்பவர்களுக்கு எதெல்லாம் சிறப்பானவை என்று தெரிந்துகொள்ள...
படிப்பு, ஒழுக்கம் இவை இரண்டில் எது சிறந்தது?
ஒழுக்கம் தான்.
பழிபாவங்களுக்கு அஞ்சுவது, அன்பு காட்டுவது இவை இரண்டில் எது சிறந்தது?
பழிபாவங்களுக்கு அஞ்சுவதே சிறந்தது.
அறிவில் சிறந்த மேதையாக இருப்பது, கற்றதை மறவாமல் இருப்பது இவை இரண்டில் எது சிறந்தது?
கற்றதை மறவாமல் இருப்பது சிறந்தது.
இல்லை என்று வந்தவர்களுக்கு உதவுவது, பொய் சொல்லாமல் இருப்பது இவை இரண்டில் எது சிறந்தது?
வாய்மையே சிறந்தது.
இளமையா? நோய் இல்லாமல் இருப்பதா?
நோய் இல்லாமல் இருத்தல் சிறந்தது.
உடல் அழகா? கெட்ட வழியில் போகத்தெரியாமல் இருப்பதா?
கெட்ட வழியில் போக
அஞ்சும் நாணம் சிறந்தது.
குலப்பெருமை , கற்பு நெறி இவை இரண்டில்?
கற்பு நெறியைக் கடைப்பிடித்தல் சிறந்தது.
கற்றுக்கொள்வது, கற்றவர்களின் நட்பில் இருப்பது இவற்றில்?
கற்றலை விடக் கற்றவர்கள் வழிநிற்றல் சிறந்தது.
எதிரி மீது கோபம், நம் மீது கோபம்
இரண்டில்?
எதிரி மீது கோபம் கொள்வதை விட, அவன் எதிரியாகக் காரணமான நம் மீது கோபம் கொள்ளுதல் சிறந்தது.
செல்வம் சேர்ப்பது, இருப்பது குறையாமல் பார்த்துக் கொள்வது இவை இரண்டில்?
செல்வம் சேர்ப்பதை விட செல்வம் குறையாமல் வாழ்தல் சிறந்தது.
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்
ஓதலின் சிறந்தன்று, ஒழுக்கம் உடைமை.
காதலின் சிறந்தன்று, கண் அஞ்சப்படுதல்.
மேதையின் சிறந்தன்று, கற்றது மறவாமை.
வண்மையின் சிறந்தன்று, வாய்மை உடைமை.
இளமையின் சிறந்தன்று, மெய் பிணி இன்மை.
நலன் உடைமையின் நாணுச் சிறந்தன்று.
குலன் உடைமையின் கற்புச் சிறந்தன்று.
கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று.
செற்றாரைச் செறுத்தலின் தற் செய்கை சிறந்தன்று.
முன் பெருகலின் பின் சிறுகாமை சிறந்தன்று.
(முதுமொழிக்காஞ்சி)
Comments
Post a Comment
Your feedback