காற்றடிக்கும் போது பனை மரத்தில்
காய்ந்த ஓலை சலசலக்கும்.
அது அங்குமிங்கும் ஆடி பெரிய சத்தத்தை உருவாக்கும்.
அதே பனை மரத்தில் இருக்கும் பச்சை ஓலைகள் எந்தச் சத்தமும் போடாமல் அமைதியாக இருக்கும்.
எதையாவது ஓயாமல் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அந்த காய்ந்த பனை ஓலை போன்ற மனிதர்கள்.
அவசியம் இல்லாமல் பேசினால் தன் பேச்சுக்கு மதிப்பு குறைந்துவிடும் என்ற அச்சத்தால் கற்றறிந்த நாக்கினை உடையவர்கள் பச்சைப் பனை ஓலை போல அமைதியாக இருப்பார்கள்.
கற்றறிந்த நாவினார் சொல்லார்தம் சோர்வஞ்சி
மற்றைய ராவார் பகர்வர் பனையின்மேல்
வற்றிய ஓலை கலகலக்கும், எஞ்ஞான்றும்
பச்சோலைக்கு இல்லை ஒலி.
(நாலடியார் 256)
Comments
Post a Comment
Your feedback