எங்கே திருடப் போகலாம் என்று திட்டம் போடுபவன் தூங்க முடியாமல் விழித்து இருப்பான்.
காதலியிடம் மனதைப் பறிகொடுத்துவிட்டு அந்த நினைவில் நாளை ஓட்டிக் கொண்டிருப்பவன் தூங்க முடியாது.
இன்னும் சம்பாதிக்க வேண்டும், இன்னும் சம்பாதிக்க வேண்டும் என்று பேராசையில் மாட்டிக் கொண்டவன் தூங்க முடியாது.
அப்படிச் சம்பாதித்தவன், பிறகு அந்தப் பொருளைக் காப்பாற்ற வேண்டும் என்று தவிப்பதால் அவனும் தூங்க முடியாது.
கள்வமென் பார்க்குந் துயிலில்லை காதலிமாட்டு
உள்ளம்வைப் பார்க்குந் துயிலில்லை ஒண்பொருள்
செய்வமென் பார்க்குந் துயிலில்லை அப்பொருள்
காப்பார்க்கும் இல்லை துயில்.
(நான்மணிக் கடிகை)
Comments
Post a Comment
Your feedback