என்னதான் பெருமையோ இந்த சேர மன்னனுக்கு.
அவன் இந்த நாட்டையும் நகரத்தையும் ரொம்பத் திறமையோடு ஆள்கின்றான் என்கிறார்கள்.
எனக்குத் தெரிந்த வரையில் அவன் அவ்வளவு கூர்மையான அறிவு உடையவன் என்று சொல்ல முடியவில்லை.
அவனுக்கு அவ்வளவு அறிவு இருந்திருந்தால் நான் அவனைப் பார்க்கும்போது என் மனதை அறிந்து இருப்பான் அல்லவா.
ஆனால் அவன் அப்படி அறிந்ததாகவே தெரியவில்லை.
நானே போய்ச் சொன்னால்தான் புரியும் போலிருக்கிறது அவனுக்கு!
இந்த அழகில் எல்லோரும் அவன் அறிவைப் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
மல்லல்நீர் மாந்தையார் மாக்கடுங்கோக் காயினும்
சொல்லவே வேண்டும் நம் குறை-நல்ல
திலகங் கிடந்த திருநுதலாய் அஃதால்
உலகங் கிடந்த இயல்பு!
(முத்தொள்ளாயிரம்)
Comments
Post a Comment
Your feedback