தோளில் நாகப் பாம்பு
கழுத்தில் நஞ்சு
சுடுகாட்டு வாசம்
சித்தர் போல வேசம்.
ஆனால்
பக்கத்தில்
பச்சைக்கிளி போல் ஒரு பெண்.
அது போதாதென்று
ஆசைக்காக ஒரு பெண்ணைத் தலையில் வைத்துக்கொண்டு...
இப்படியும் ஒரு சித்தர்.
சிவபெருமானைத் தான் இப்படிச் சொல்கிறார் இந்தப் புலவர்.
நாகம் புயத்திற் கட்டி நஞ்சு கழுத்திற் கட்டிக்
காகம் அணுகாமல் எங்கும் காடு கட்டிப்
பாகந் தனிலொரு பெண் பச்சைக் கிளிபோல் வைத்து
மோகம் பெற வொருபெண் முடியில் வைத்தார்
– இந்தச் சித்தர் ஆரோ
(முக்கூடற்பள்ளு)
Comments
Post a Comment
Your feedback