கதைகள் பல விதம்.
Anecdote
Legend
Parable
Fable
Novel
என்றெல்லாம்....
இவற்றுள் anecdote தான் மிகச் சிறிய கதை. துணுக்கு வகைக் கதை அது.
ஒரு நொடி, ஒரு நிமிடக் கதைகள் எல்லாம் இந்த வகை.
Legend? காலங்காலமாக ஒரு மரபாக இருந்து வரும் கதை. நடந்த கதையா? அல்லது கற்பனையா? என்று கண்டுபிடிக்க முடியாமல் காலங்காலமாக இருந்து வரும் கதைகள் எல்லாம் இந்த வகை.
நீதிக் கதைகள் எல்லாம் parable வகையில் அடங்கும். பெரும்பாலும் இவை இராமாயணம், மகாபாரதம், பைபிள் என மூல நூலில் இருந்து எடுக்கப்பட்ட நீதிக் கதைகளாகத் தான் இருக்கும்.
சிறுவர்கள், பெரியவர்கள் என எல்லோரையும் கவர்பவை fables வகைக் கதைகள். விலங்குகள் பேசுவதாகவும் யோசிப்பது போலவும் வரும் இந்தக் கதைகளில் நீதிக் கருத்துக்கள் இருக்கும். குழந்தைகள் மனதில் நல்ல சிந்தனைகளை வளர்க்க இந்தக் கதைகள் பயன்படுகின்றன.
கொஞ்சம் பெரிய கதைகள் எல்லாம்
novel வகைப்பாட்டுக்குள் வரும். ஒருவரைப் பற்றிய அல்லது ஒரு பின்புலத்தைப் பற்றிய அல்லது ஒரு நிகழ்ச்சியைப் பற்றிய செய்திகள் கதை வடிவம் பெற்றால் அது இந்த வகையில் வரும். அதற்குள் history, crime, horror என பல பிரிவுகள் அடங்கும்.
கதை படிப்பவர்களுக்கு அது எந்த வகை எனத் தெரிய வேண்டியதில்லை.
கதை எழுதுபவர்களுக்கு அது கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும்.
Comments
Post a Comment
Your feedback